பொது செய்தி

தமிழ்நாடு

சைபர் கிரைம் மோசடியா

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'சைபர் மோசடிகளில் பணத்தை பறிகொடுத்தவர்கள் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை மூலம் தீர்வு காணலாம்' என, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.வளர்ந்து வரும் இணைய வளர்ச்சிக்கு ஏற்ப இணையதள மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடி புகார்களும் வந்த வண்ணம் உள்ளன. பணம், பொருள் ஏதேனும் மோசடி செய்து பறிகொடுக்கும் நபர்கள் அறியாமையால்

திண்டுக்கல் : 'சைபர் மோசடிகளில் பணத்தை பறிகொடுத்தவர்கள் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை மூலம் தீர்வு காணலாம்' என, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

வளர்ந்து வரும் இணைய வளர்ச்சிக்கு ஏற்ப இணையதள மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடி புகார்களும் வந்த வண்ணம் உள்ளன. பணம், பொருள் ஏதேனும் மோசடி செய்து பறிகொடுக்கும் நபர்கள் அறியாமையால் புகார் அளிக்க மறுக்கின்றனர். பெரிய அளவில் பணத்தை பறிகொடுத்தவர்கள் மட்டுமே புகார் அளிக்கின்றனர். சிலர் புகார் அளிக்கவும் காலதாமதம் செய்கின்றனர். ஏமாற்றப்பட்ட உடனே புகார் அளித்தால் துரித நடவடிக்கை மூலமாக பணத்தை மீட்கலாம்.

போலீசார் கூறியது: சிறிய அளவில் நடக்கும் மோசடிகளை மக்கள் கடந்து விடுகின்றனர். தாமாக முன் வந்து புகார் அளித்தால் இது போன்ற குற்றத்தை தடுக்க முடியும். சைபர் தொடர்பான குற்றங்கள் மீது புகார் அளிக்க 155260 எண்ணிலும்,Http://cybercrime.gov.inயை அணுகலாம். இல்லையெனில் சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் நேரில் புகார் அளிக்கலாம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X