பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை டாக்டர் பணி நிரப்பப்படுமா

Added : ஆக 20, 2021
Share
Advertisement
வடமதுரை : தமிழகத்தில் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ள உதவி கால்நடை டாக்டர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து இளைஞர் காங்., மாவட்ட செயல் தலைவர் கவுதம் ஜெயசாரதி கூறியது: நீதிமன்ற வழக்குகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக கால்நடை பராமரிப்பு துறையில் உதவி டாக்டர் பணியிடம் நிரப்பப்படவில்லை. டாக்டர் பற்றாக்குறையை சமாளிக்க 2 ஆண்டுகளுக்கு முன் 818 உதவி டாக்டர்கள்

வடமதுரை : தமிழகத்தில் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ள உதவி கால்நடை டாக்டர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து இளைஞர் காங்., மாவட்ட செயல் தலைவர் கவுதம் ஜெயசாரதி கூறியது: நீதிமன்ற வழக்குகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக கால்நடை பராமரிப்பு துறையில் உதவி டாக்டர் பணியிடம் நிரப்பப்படவில்லை. டாக்டர் பற்றாக்குறையை சமாளிக்க 2 ஆண்டுகளுக்கு முன் 818 உதவி டாக்டர்கள் ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.தற்போது 780க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். கடந்த ஆட்சியில் ஆயிரத்து 141 காலிப் பணியிடங்களில் உதவி டாக்டர்களை நிரப்ப தேர்வு நடந்தது. ஆனால் தேர்வானவர்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்கவில்லை. அவர்களுக்கு உடனே பணி உத்தரவை வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X