பொது செய்தி

தமிழ்நாடு

வார ராசி பலன்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021
Share
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை ( 20.8.2021- 26.8.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்: சூரியன், புதன். குரு அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். துர்கையைத் துதித்தால் கஷ்டம் நீங்கும்.அசுவினி: கடந்த வார சிரமங்களிலிருந்து விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். நண்பர்களால் நன்மை ஏற்படும். எந்தச் செயலையும்
ராசிபலன், பரிகாரம், பலன்,வாரராசி, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, மிதுனம், துலாம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மகரம், கும்பம்

வெள்ளி முதல் வியாழன் வரை ( 20.8.2021- 26.8.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்:


சூரியன், புதன். குரு அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். துர்கையைத் துதித்தால் கஷ்டம் நீங்கும்.

அசுவினி: கடந்த வார சிரமங்களிலிருந்து விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். நண்பர்களால் நன்மை ஏற்படும். எந்தச் செயலையும் நிதானமாகச் செய்து வெற்றி இலக்கை அடைவீர்கள்.

பரணி: வெற்றி கிடைக்கும். நிதானமாக அணுகிக் குடும்பத்திலுள்ள குழப்பங்களை தீர்ப்பீர்கள். செலவுகள் அடியோடு குறையும். தந்தைவழி உறவுகளால் இருந்த வீண் தொல்லை மறையும்.

கார்த்திகை1: தீயவர்கள் தொடர்பால் ஏற்பட்ட சஞ்சலம் நீங்கும். வியாபாரத்தில் புதிய உத்திகளைப் புகுத்தி லாபத்தை அதிகரிக்க முயல்வீர்கள். சுப விஷயத்தில் தடைகள் விலகும்.


ரிஷபம் :


புதன், சூரியன், சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். அம்மன் வழிபட்டால் மகிழ்ச்சி கூடும். கார்த்திகை 2,3,4: இடைவிடாமல் உழைப்பீர்கள். சாப்பிடக் கூட நேரம் இருக்காது. அரசு வகையில் சலுகை காண்பீ்ர்கள். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்தியான வாரம் இது.

ரோகிணி: கடன் வாங்க நேரலாம். திருமண வாய்ப்பு தடை, தாமதத்திற்குப் பிறகு இப்போது கூடி வரும். நல்ல நிகழ்வுகள் வீட்டிலும், அலுவலகத்திலும் நடைபெறும்.

மிருகசீரிடம்1,2 : பல நாட்களாகக் காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். மாணவர்களுக்குக் கல்வியில் ஈடுபாடு கூடும். கணவன், மனைவி இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.


மிதுனம்:


ராகு, கேது, குரு சாதக நிலையில் உள்ளனர். விஷ்ணு வழிபாடு நலம் தரும்.

மிருகசீரிடம் 3,4: பெரியோர்களின் ஆசி கிடைக்கும். முயற்சிகள் வெற்றி அடையும். அக்கம் பக்கத்தினரால் பிரச்னை ஏற்பட்டு விலகும். தொழிலில் லாபம் கூடும்.திருவாதிரை: நீங்கள் அமைதி காத்தால் குடும்பத்தில் சந்தோஷம் குறையாது. நண்பர்களைப் பற்றி மற்றவர்களிடம் வம்பு பேச வேண்டாம். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.

புனர்பூசம் 1,2,3: எந்தவித ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம். கடந்த கால அனுபவம் ஓரளவு கைகொடுக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். உடல்நலனில் அக்கறை தேவை.

சந்திராஷ்டமம்: 20.8.2021 அதிகாலை 4:45 மணி - 22.8.2021 காலை 9:11 மணி


கடகம் :


சுக்கிரன், ராகு நன்மைகளை வாரி வழங்குவர். ராமர் வழிபாடு நிம்மதி அளிக்கும்.

புனர்பூசம் 4: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்ப்பு ஓரளவே நிறைவேறும்.

பூசம்: சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பணியாளர்களும், தொழில் செய்வோரும் தடைகளை முறியடித்து முன்னேறுவர்.

ஆயில்யம்: அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. ரிஸ்க் தரும் விஷயங்களை யோசிக்க வேண்டாம்.சந்திராஷ்டமம்: 22.8.2021 காலை 9:12 மணி - 24.8.2021 மாலை 3:48 மணி


சிம்மம் :


குரு, புதன், சூரியன் அனுகூலம் தருவர். திருமகள் வழிபாடு சிரமம் தீர்க்கும்.

மகம்: பணவசதி கூடும். தெய்வசிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம்.

பூரம்: எதிர்பாராத பணவரவு கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். தடைபட்ட நிதிஉதவி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலநலன் குறித்து கவலை உண்டாகலாம்.

உத்திரம்1: பணியாளர்களின் வேலைப்பளு, வீண்அலைச்சல் குறையும். சக ஊழியர்களிடம் இணக்கமான போக்கு காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த வருத்தம் தீரும்.

சந்திராஷ்டமம்: 24.8.2021 மாலை 3:49 மணி - 26.8.2021 இரவு 12:52 மணி


latest tamil news



கன்னி :


சந்திரன், கேது அதிர்ஷ்டமான பலன்கள் தருவர். குருவாயூரப்பன் வழிபாடு நல்லது.

உத்திரம் 2,3,4: தொழில், வியாபாரம் செய்வோருக்குப் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பார்கள்.

அஸ்தம்: இந்த வாரம் எதிலும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை, சாதுர்யத்தால் எடுத்த விஷயங்கள் சாதகமாக முடியும். நல்லவர்களின் உதவி கிடைக்கும்.

சித்திரை1,2: தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல். பணிச்சுமை குறையும்.


துலாம்:


குரு, புதன், சூரியன் அனுகூல அமர்வில் உள்ளனர். மகாலட்சுமி வழிபாடு நலம் தரும்.

சித்திரை 3,4: எதிர்பார்த்த விஷயங்கள் சாதகமாக நடக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே பூசல் ஏற்பட்டு சரியாகும். பெண்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும்.

சுவாதி: எடுத்த முயற்சியை நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பணவரவு திருப்தியளிக்கும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் நீங்கும்.

விசாகம் 1,2,3: குடும்பச் செலவு கூடும். குடும்பம் பற்றிய கவலை தீரும். உறவினர்கள், நண்பர்களிடம் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்


விருச்சிகம் :


சூரியன், சந்திரன், புதன் நற்பலன் தருவர். முருகன் வழிபாடு சிரமம் போக்கும்.

விசாகம் 4: முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அவர்களால் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். மாணவர்களுக்கு இருந்த கவலை மறையும்.

அனுஷம்: விலை உயர்ந்த பொருள் வாங்குவதையோ, மற்றவர்களுக்கு கடன் தருவதையோ தவிர்த்திடுங்கள். பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உயர் பதவிகள் தேடி வரும்.

கேட்டை: வேலைப்பளு காரணமாக ஓய்வின்றி உழைப்பீர்கள். குடும்பம் சிறப்பாக நடக்கும். மனதில் குதுாகலம் தலைகாட்டும். கடனில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள்.


தனுசு :


சந்திரன், ராகு, கேது நற்பலன் தருவர். பெருமாள் வழிபாடு வளம் சேர்க்கும்.

மூலம்: திட்டமிட்டு பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வாழ்வில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சியில் சாதகபலன் கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும்.

பூராடம்: பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வெளியூரில் தங்க நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திராடம்1: பாதியில் நின்ற பணியை தொடர்வீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.


மகரம்:


குரு, புதன், கேது, சந்திரனால் அதிர்ஷ்டம் சேரும். சனீஸ்வரர் வழிபாடு சிரமம் போக்கும்.

உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடந்த சில வாரங்களாக இருந்த மந்தநிலை மாறும். நண்பர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும்.

திருவோணம்: சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பர். உடல்நலனில் அக்கறை கொள்வீர்கள்.

அவிட்டம் 1,2: குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். வீடு, வாகன வகையில் செலவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.


கும்பம் :


புதன், சூரியன், குருவால் நன்மை கிடைக்கும். சூரியன் வழிபாடு சுகம் தரும்.

அவிட்டம் 3,4: பணவரவு திருப்தி தரும். சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். கடமைகளில் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள்.

சதயம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். மகன்/ மகளுக்காக நீங்கள் செய்த முயற்சிகள் வீண் போகாது.


மீனம் :


புதன், ராகு, சுக்கிரன் தாராள நற்பலன் வழங்குவர். தட்சிணாமூர்த்தி வழிபாடு சிரமம் நீக்கும்

பூரட்டாதி 4: திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். நெருங்கிய உறவினர், நண்பர்களின் ஒத்துழைப்பால் சிரமங்களும் கவலைகளும் நீங்கும்.

உத்திரட்டாதி: வீண்செலவு குறையும். திறமை வெளிப்படும். முயற்சிகள் சாதகமாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறுவம்.

ரேவதி: உழைப்பும், பொழுதுபோக்கும் சம அளவில் இருக்கும். களைப்பின்றி உற்சாகமாக பணியில் ஈடுபடுவீர்கள். உடல்நலக்குறைவு சரியாகும். பிறரை மகிழ்ச்சி கண்டு சந்தோஷம் கொள்வீர்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X