பொது செய்தி

தமிழ்நாடு

மொகரம் பண்டிகை கொண்டாடிய ஹிந்துக்கள்

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மொகரம் பண்டிகையை, ஹிந்துக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதூர் கிராமத்தில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக, அல்லாவுக்கு விழா எடுத்து, அந்த ஊரில் உள்ள ஹிந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.முன்னோர்களின் வழிகாட்டின் பெயரில், தற்போது 5 முஸ்லீம் குடும்பங்களுடன் இணைந்துஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று, இந்த விழா கொண்டாடப்பட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மொகரம் பண்டிகையை, ஹிந்துக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.



latest tamil news



தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதூர் கிராமத்தில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக, அல்லாவுக்கு விழா எடுத்து, அந்த ஊரில் உள்ள ஹிந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.முன்னோர்களின் வழிகாட்டின் பெயரில், தற்போது 5 முஸ்லீம் குடும்பங்களுடன் இணைந்துஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று, இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


latest tamil news



மொகரம் பண்டிகைக்கு, 10 நாட்களுக்கு முன் விரதம் இருந்து, அல்லா சாமி என்றழைக்கப்படும், 'உள்ளங்கை' உருவத்தை வெளியே எடுத்து, அதற்கு தினமும் பூஜை செய்து வழிபடுவர். தொடர்ந்து, நேற்று இரவு, ஊரின் மையத்தில் உள்ள அல்லா கோவில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டது.
உள்ளங்கை திருவுருவத்தை வீதியுலாவாக, இன்று(20ம் தேதி) அதிகாலை வரை எடுத்துச் சென்றனர்.அப்போது, பெண்கள் வீடுகளில் புதிய மண் கலயத்தில் பானகம் கரைத்து, அவல், தேங்காய், பழம் வைத்து, அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
மேலும் அல்லா கோவில் முன், தீ மிதி விழா நடந்தது. ஏராளமானோர், தங்கள் பிரார்த்தனை நிறைவேற வேண்டி, தீ மிதித்து, அல்லாவை வழிபட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
20-ஆக-202118:50:07 IST Report Abuse
jagan முகமது வின் பேரன்களை (ஹசன், ஹுசேன்) கலீபா போட்டு தள்ளிய நாள். ஷியா பிரிவில் உள்ள ஜாதி மட்டுமே அனுசரிப்பார்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஆக-202118:04:40 IST Report Abuse
Pugazh V @தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா : நாம அவங்க பண்டிகையை கொண்டாடினா பதிலுக்கு அவங்களும் நம்ம பண்டிகையை கொண்டாடணும் என்று ஏன் எதிர்பார்க்கணும் ? சிறந்த பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
20-ஆக-202118:00:55 IST Report Abuse
Shekar முஹரம் ஒரு துக்க நிகழ்வு அனுசரிப்பு நாள், கொண்டாட்ட நாள் அல்ல, இது ஷியா பிரிவு மக்கள் மட்டுமே அனுசரிப்பது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X