பொது செய்தி

இந்தியா

'பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., உடன் வோடபோன் ஐடியாவை ஒருங்கிணைக்கலாம்'

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:ஒருபக்கம், பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., ஆகியவை படுக்கையில் கிடக்கின்றன. இன்னொரு பக்கம், தனியார் துறை நிறுவனமான, 'வோடபோன் ஐடியா' இதே நிலைமைக்கு சென்று கொண்டு இருக்கிறது.இந்நிலையில், இம்மூன்று நிறுவனங்களையும் ஏன் ஒருங்கிணைக்க கூடாது என, சந்தையில்சில நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.வாய்ப்பு
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், வோடபோன் ஐடியா,

புதுடில்லி:ஒருபக்கம், பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., ஆகியவை படுக்கையில் கிடக்கின்றன. இன்னொரு பக்கம், தனியார் துறை நிறுவனமான, 'வோடபோன் ஐடியா' இதே நிலைமைக்கு சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், இம்மூன்று நிறுவனங்களையும் ஏன் ஒருங்கிணைக்க கூடாது என, சந்தையில்சில நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.


வாய்ப்பு


தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து ஓய்ந்து விட்டது, வோடபோன் ஐடியா. இதேபோல் தான் பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் கதையும்.

இந்நிலையில், இம்மூன்றையும் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு வாய்ப்பை பெறலாம் என்கிறார்கள். தொழில்நுட்ப விஷயத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், '4ஜி ஸ்பெக்ட்ரம்' சேவையில் சிக்கல்களுடன் உள்ளன. அதேசமயம், '2ஜி' மற்றும், '3ஜி' சேவையில் சிறப்பாக இருக்கின்றன. வோடபோன் ஐடியாவிடம், '4ஜி' வசதி சிறப்பாக இருக்கிறது. இணைப்பின் வாயிலாக பி.எஸ்.என்.எல்., தன்னுடைய 3ஜி சேவையை, 4ஜி சேவையாக உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., கிராமப்பகுதிகளில் வலுவாக இருக்கின்றன. வோடபோன் ஐடியா நகரம் மற்றும் பெருநகரங்களில் வலுவானதாக இருக்கிறது. லேண்ட்லைன் இணைப்புகளில், வோடபோன் ஐடியா சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாத நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள், இச்சேவையில் மற்றவற்றை விட வலுவாக இருக்கின்றன. மேலும் இந்த இரு பொதுத்துறை நிறுவனங்கள் வசம், நாடு முழுக்க, 8 லட்சம் கிலோமீட்டர் 'பைபர் நெட்வொர்க்' இருக்கிறது. இதனால் 5ஜி சேவையை வழங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு வோடபோனுக்கு கிடைக்கும்.
இது போன்ற சாதகமான பல அம்சங்கள் இவை இணையும்பட்சத்தில் இருதரப்புக்கும் கிடைக்கும். இருப்பினும் சில சிக்கல்களும் இருக்கின்றன. சம்பள விகிதங்கள், தொழிலாளர்கள் எண்ணிக்கை போன்றவற்றில் பலத்த வித்தியாசங்கள் இருக்கின்றன.


latest tamil news




சிக்கல்கள்


ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வோடபோன் ஐடியா ஏலத்தில் பெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் அரசு நிர்வாக ஒதுக்கீட்டின் வாயிலாக பெற்றுள்ளன. இணைப்புக்கு பிறகு இதை எப்படி கையாள்வது என்பதில் சில சட்ட சிக்கல்கள் எழலாம்.இருப்பினும், தடுமாறும் இம்மூன்று நிறுவனங்களையும் நிலை நிறுத்திக் கொள்ள, இந்த ஒருங்கிணைப்பு ஒரு நல்ல வாய்ப்பு. இந்த முயற்சியையும் எடுக்காவிட்டால், இம்மூன்று நிறுவனங்களையும் காப்பாற்றுவது கஷ்டம் என்கிறார்கள் நிபுணர்கள்.


சவால்


பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, வேலை பாதுகாப்பு, ஓய்வூதியம் என பல வசதிகள் இருக்கின்றன. ஆனால் தனியார் நிறுவனத்தில் இந்த வசதிகள் இல்லை. இதனால் இணைப்பில் இது பெரிய சவாலாக இருக்கக்கூடும்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S MURALIDARAN - Chennai,இந்தியா
22-ஆக-202118:41:36 IST Report Abuse
S MURALIDARAN ஒரு காலத்தில் தனிக் கோலாட்சி செய்து வந்த அரசு நிறுவனங்கள், யானைக்கும் அடி சறுக்கும் கதையாக, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதற்கு காரணம் அளவுக்கு மீறிய தொழிலாளர்களால் ஏற்ப்பட்ட செலவுகளுமே.
Rate this:
Cancel
Rangamannar Srinivasan - Chennai-083,இந்தியா
21-ஆக-202107:12:52 IST Report Abuse
Rangamannar Srinivasan இந்த 3 நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தால், பின்வரும் காலங்களில் நன்மையே பயக்கும். ஒரு பயனுள்ள போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.
Rate this:
Cancel
21-ஆக-202105:54:12 IST Report Abuse
முருகன் யார் ஆட்சியில் இருந்தாலும் தவறு செய்தால் உடனே தன்டனை மற்றும் பதவி நீக்கம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும் . அப்போது தான் தவறு செய்யும் அரசியல் வாதிகள் பயப்படுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X