அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுகவின் 100 நாள் ஆட்சி என்பது இனிப்பு, கசப்பு, காரம் : அண்ணாமலை விமர்சனம்

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (70)
Share
Advertisement
தூத்துக்குடி: ‛‛திமுக ஆட்சியின் இந்த 100 நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம் போன்றது'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருநெல்வேலியில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர்
திமுக, ஆட்சி, இனிப்பு, கசப்பு, காரம், அண்ணாமலை, விமர்சனம்

தூத்துக்குடி: ‛‛திமுக ஆட்சியின் இந்த 100 நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம் போன்றது'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர்.

அங்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:
புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் தரவேண்டும் என்பது மரபு.இருப்பினும் திமுக ஆட்சியின் இந்த 100 நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம் போன்றது.


latest tamil news



இனிப்பு என்னவென்றால், மத்திய அரசுடன் இணைந்து இரண்டாம் அலை கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. கசப்பு என்னவென்றால் ஒன்றிய அரசின் ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை தேவையில்லாமல் பேசி வருகின்றனர். தமிழகத்தில் அனேக இடங்களில் பாஜ தொண்டர்களை கைது செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை என்பது முடித்து வைக்கப்பட்ட வழக்கு. அந்த வழக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக வழக்கை மீண்டும் கையிலெடுப்பது போல தோன்றுகிறது. இதுபோலவே ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனைகளையும் செய்து வருகின்றனர். இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் விட்டுவிட்டு, கொரோனா மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து அதை தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 54 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 2.5 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
21-ஆக-202100:28:31 IST Report Abuse
Venkatakrishnan ? கூட்டணி வச்சு நாலு சீட்ட வாங்கிட்டு இவனுங்க பேசுற பேச்சு இருக்கே.. அப்பப்பா
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
20-ஆக-202122:06:17 IST Report Abuse
T.sthivinayagam தேசிய கட்சியின் தமிழக இரண்டாவது திராவிடர் தலைவர்
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
20-ஆக-202121:50:15 IST Report Abuse
Elango குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது மோடி மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தார்.அதாவது ஆங்கிலத்தில் யூனியன் கவர்ன்மென்ட் என்று அழைத்தார் அமிட்ஷாவும் கூறினார்... இப்ப திமுக சொன்னா மட்டும் ஏன் கோவ பட வேண்டும் அண்ணாமலை...சங்கிகளுக்கு வரலாறு தெரியாதா இல்லை நடிப்பா...நடிப்பு தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X