வாடகைக்கு வாகனம் பெற்று மோசடி பெண் மீது கமிஷனரிடம் புகார்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கோவை : வாடகைக்கு சரக்கு வாகனங்கள் மற்றும் கார்களை பெற்று பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மீது, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.கோவை, ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மதுசூதன ரெட்டி. இவர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:நான் கடந்த, எட்டு ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களுக்கு வாடகைக்கு சரக்கு

கோவை : வாடகைக்கு சரக்கு வாகனங்கள் மற்றும் கார்களை பெற்று பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மீது, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கோவை, ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மதுசூதன ரெட்டி. இவர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் கடந்த, எட்டு ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களுக்கு வாடகைக்கு சரக்கு போக்குவரத்து வாகனங்களை அளிக்கும் தொழில் செய்து வருகிறேன். சரவணம்பட்டியை சேர்ந்த, 35 வயது பெண், ஆறு சக்கர பொதுபயன்பாட்டு சரக்கு வாகனங்களை கொடுத்தால் மாத வாடகைக்கு, 70 ஆயிரம் ரூபாய் வரை தருவதாக கூறினார். இதைநம்பி என்னுடைய நான்கு லாரிகள், நான்கு கார்களை அவரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கினேன்.

லாரிகளில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ்., கருவி திடீரென துண்டிக்கப்பட்டது. சுதாரித்து நண்பர்கள் உதவியுடன் எனது நான்கு லாரிகளையும் அவரிடம் இருந்து எடுத்து வந்துவிட்டேன். ஆனால், வாடகைக்கு கொடுத்த, நான்கு கார்களை பல்வேறு இடங்களில் அடமானம் வைத்து லட்சக் கணக்கில் பணம் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்து எனது, நான்கு கார்கள் மற்றும், 16 லட்சம் ரூபாய் வாடகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X