பொது செய்தி

இந்தியா

போர் விமானங்களை ஏவுகணை தாக்குதலில் இருந்து காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: டி.ஆர்.டி.ஓ., உருவாக்கம்

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானங்களை எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், அதிநவீன 'சாப்' தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) உருவாக்கியுள்ளது.இதுகுறித்து டி.ஆர்.டி.ஓ., வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:ஜோத்பூர் மற்றும் புனேயில் உள்ள டி.ஆர்.டி.ஓ., ஆய்வகங்கள்
DRDO, chaff, technology, IAF, fighter, aircraft, போர் விமானங்கள், பாதுகாப்பு, அதிநவீன தொழில்நுட்பம், டிஆர்டிஓ, ஏவுகணை, தாக்குதல்,

புதுடில்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானங்களை எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், அதிநவீன 'சாப்' தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து டி.ஆர்.டி.ஓ., வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:ஜோத்பூர் மற்றும் புனேயில் உள்ள டி.ஆர்.டி.ஓ., ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த நவீன தொழில்நுட்பம், போர் விமானத்தில் பொருத்தும் வகையிலான 'சாப்' கேட்ரிட்ஜ் - 118/ஐ' என்ற கருவி உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நார்த் துகள்கள் லட்சக்கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும். போர் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, இந்தத் துகள்களை வெளியேற்றி காற்றில் பறக்கவிடுவதன் மூலம், தாக்க வரும் எதிரி நாட்டு ஏவுகணையை ரேடார் உதவியுடன் திசை திருப்ப முடியும். அதன் மூலம் போர் விமானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.


latest tamil newsமுக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளது குறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'பாதுகாப்புத் தொழில்நுட்ப உருவாக்கத்தில் தற்சார்பு இந்தியா இலக்கை எட்டுவதில் டி.ஆர்.டி.ஓ., மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது' எனப் பாராட்டி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
20-ஆக-202121:56:45 IST Report Abuse
sankaseshan Ramesh you are right. It is dangerous to reveal defense strategies. Do you remember Taj hotels attack. Ndtv teleed minutes by minutes resque operation bu our defense forces narrated by burka duty and dutifully passed on to pakistani terrorists .
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஆக-202121:29:17 IST Report Abuse
Pugazh V மிகவும் நன்றிதமிழ்ச்செல்வன் - Chennai,அவர்களுக்கு. soumiya போலி ஐடி தான். பெண்மணி அல்ல. URL மூலம் அறிய முடிகின்றது.
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
20-ஆக-202116:32:33 IST Report Abuse
vns விஷங்களுக்கும் விஷ அல்லக்கைகளுக்கும் இந்தியா என்றைக்குமே முன்னேறக்கூடாது. அவர்கள் விஷங்களாகவே இருப்பார்கள் மடிவார்கள். இனிமேல் தமிழகம் இந்தியாவைவிட முன்னேறிவிட்டது என்ற திரைப்பட கதைகள் செய்திகளில் கருத்துக்களில் காணலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X