பொது செய்தி

தமிழ்நாடு

ஊதிய உயர்வு கொடுங்கள் அரசு டாக்டர்கள் கோரிக்கை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சென்னை : ''கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையின்படி, அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,'' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறினார்.அவர் கூறியதாவது:கொரோனாவால் உயிரிழந்த, கர்ப்பிணி டாக்டர் சண்முக பிரியாவுக்கு, சுதந்திர தினத்தன்று துணிச்சலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்த, முதல்வருக்கு நன்றி. இந்த


சென்னை : ''கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையின்படி, அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,'' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறினார்.
அவர் கூறியதாவது:

கொரோனாவால் உயிரிழந்த, கர்ப்பிணி டாக்டர் சண்முக பிரியாவுக்கு, சுதந்திர தினத்தன்று துணிச்சலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்த, முதல்வருக்கு நன்றி. இந்த நேரத்தில், அரசு டாக்டர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுகிறோம்.

மற்ற மாநிலங்களில், எம்.பி.பி.எஸ்., டாக்டர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட இங்குள்ள, சிறப்பு, உயர் சிறப்பு டாக்டர்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக வழங்கப்படுகிறது.டாக்டர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணை, 354யை, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். இதன் வாயிலாக, டாக்டர்கள் உற்சாகமாக பணியாற்ற வழி பிறக்கும்.

இவ்வாறு பெருமாள் பிள்ளை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X