அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத பட்ஜெட்'

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சென்னை : 'தமிழக அரசின் பட்ஜெட், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது என்பதை, மக்களிடம் தெரிவிப்பதற்கு முன்னோட்டமாக, தி.மு.க., அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, தமிழகம் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து விட்டது போன்றும், கடன்

சென்னை : 'தமிழக அரசின் பட்ஜெட், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது என்பதை, மக்களிடம் தெரிவிப்பதற்கு முன்னோட்டமாக, தி.மு.க., அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, தமிழகம் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து விட்டது போன்றும், கடன் கட்டுக்கடங்காமல் சென்று விட்டது போன்றும், ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளது.ஏற்கனவே மக்கள் பெற்று வந்த, பல சலுகைகள் பறிக்கப்பட இருப்பதும், வெள்ளை அறிக்கை வழியாக தெரிகிறது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள், வருமான வரி செலுத்துவோர் பெற்று வரும் பயன்கள், சலுகைகள், மானியங்கள் பறிக்கப்படும் என்பதை, நிதி அமைச்சர் சூசகமாக தெரிவித்துள்ளார்.எங்களை குறை கூறுவதை விட்டு, மாநில நலனை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க.,வால் அறிவிக்கப்பட்ட, தேர்தல் வாக்குறுதிகள், ஆட்சியை பிடிப்பதற்காக மட்டுமே.மக்கள் நல அரசு எது என்பதை, தமிழக மக்கள் தெரிந்து கொள்ளும் காலம், வெகு துாரத்தில் இல்லை.

ஏழை பெண்களின் திருமண உதவி திட்டம் உட்பட, அ.தி.மு.க., ஆட்சி திட்டங்களை விட்டு விடாதீர்கள்.பட்ஜெட்டில் வறுமையை ஒழிக்கும் அணுகுமுறைகள் எதுவும் இல்லை. வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் இல்லை. முக்கியத் துறைகளிலும், புதிய யுக்தியோ, அணுகுமுறையோ எடுத்துரைக்கப்படவில்லை.

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், மூன்று மாதங்களில், 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு இருப்பதாக, நிதித் துறை செயலர் கூறியதாக செய்தி உள்ளது. புதிதாக வருவாய் வருவதற்கான வழிமுறைகள் எதுவும், பட்ஜெட்டில் இல்லை.உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். மொத்தத்தில், இந்த பட்ஜெட், ஏழை எளிய நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.

இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X