சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் ரூ. 697 கோடி முறைகேடு? லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாநகராட்சியில், 12 நிறுவனங்களுக்கு பல்வேறு வேலைகளுக்காக, 697 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.டெண்டர் வழங்குவதில், உயரதிகாரிகள் ஒத்துழைப்பின்றி, முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. 2016 முதல் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், மாநகராட்சி கமிஷனர்களே, தனி அலுவலர்களாக கூடுதல் பொறுப்பு வகித்து, ஒப்பந்த



கோவை : கோவை மாநகராட்சியில், 12 நிறுவனங்களுக்கு பல்வேறு வேலைகளுக்காக, 697 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

டெண்டர் வழங்குவதில், உயரதிகாரிகள் ஒத்துழைப்பின்றி, முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. 2016 முதல் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், மாநகராட்சி கமிஷனர்களே, தனி அலுவலர்களாக கூடுதல் பொறுப்பு வகித்து, ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணிகளை வழங்கியிருக்கின்றனர். கோவை மாநகராட்சியில், 2016 நவ., முதல், 2021, மே வரை, 72 கூட்டங்கள் நடத்தப்பட்டு, 2,886 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை, மாநகராட்சி இணைய தளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவது வழக்கம்.

கடந்த ஆட்சியில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கே பல கோடி ரூபாய் டெண்டர் வழங்குவது; டெண்டர் கோருவதற்கு முன்னரே சில நிறுவனங்களுக்கு பணிகள் வழங்கியது உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்ததால், தீர்மானங்கள் பதிவேற்றுவது நிறுத்தப்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அனைத்து தீர்மானங்களும் பதிவேற்றப்பட்டன.இதில், எந்தெந்த நிறுவனங்களுக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு பணிகள் வழங்கப்பட்டன என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. குறிப்பிட்ட, 12 நிறுவனங்களுக்கு மட்டும், 697 கோடி ரூபாய் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

டெண்டர் கோரும் முன்பே, சில நிறுவனங்கள் பணி செய்ய அனுமதித்துள்ளன. பின், டெண்டர் நடந்ததாகவும், அந்நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாகவும், 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டு உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை, தனித்தனியாக பிரித்து, சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.சில இடங்களில், பல கோடி ரூபாய் செலவழித்து, கட்டமைப்பு உருவாக்கி இருப்பதாக பில் சமர்ப்பிக்கப்பட்டு, தொகை எடுக்கப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட இடத்தில், அத்தகைய கட்டமைப்பே இல்லை. அதிகாரிகள் பலரும், முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றியுள்ள கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X