பொது செய்தி

தமிழ்நாடு

கள் விற்பனைக்கு அனுமதி விவசாயிகள் கோரிக்கை 

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருப்பூர் : 'பாட்டிலில் கள் அடைத்து விற்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்' என்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் தெரிவித்துள்ளது.இதன் மாநில தலைவர் தெய்வாசிகாமணி கூறியதாவது:பட்ஜெட்டில் மாநில அரசு, 5.75 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. இவ்வளவு கடன் நிலுவை வைத்துள்ள அரசு, வேளாண்மைக்கென தனி பட்ஜெட் போட்டாலும், விவசாயிகள் எதிர்பார்ப்பை

திருப்பூர் : 'பாட்டிலில் கள் அடைத்து விற்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்' என்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் தெரிவித்துள்ளது.

இதன் மாநில தலைவர் தெய்வாசிகாமணி கூறியதாவது:

பட்ஜெட்டில் மாநில அரசு, 5.75 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. இவ்வளவு கடன் நிலுவை வைத்துள்ள அரசு, வேளாண்மைக்கென தனி பட்ஜெட் போட்டாலும், விவசாயிகள் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்ற முடியாது.அரசின் வருவாயை பெருக்க, கள்ளு கடைக்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். கள் பாட்டிலில் அடைத்து விற்க அனுமதி வழங்கியிருந்தால் தென்னை, பனை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இதனால், டாஸ்மாக் வருவாய் குறையாது. அரசின் வருவாய் சரிவை கள்ளுக்கடை சரிகட்டும்.அரசு ஒரு பொருளை வாங்கி வினியோகித்தால், அதில் ஊழல் நடக்கிறது. விதை நெல், உரத்தை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு வழங்குவதை விடுத்து, அதற்கான தொகையை 'டிஜிட்டல்' முறையில் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X