ஆப்கனில் வீடு வீடாக சோதனை நடத்தும் தலிபான்

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
காபூல்: அமெரிக்கா மற்றும் நேடோ படையினருக்கு உதவியவர்களை தேடி, தலிபான் பயங்கரவாதிகள் வீடு வீடாக சென்று சோதனை நடத்துவதாக ஐ.நா.,வின் ரகசிய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்க வெளியேற்றத்தை தொடர்ந்து, ஆப்கனில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால், ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர். அனைவருக்கும் பொது மன்னிப்பு
Afghan, taliban, US, Nato, Raid,ஆப்கன்,  தலிபான், சோதனை, பயங்கரவாதிகள்

காபூல்: அமெரிக்கா மற்றும் நேடோ படையினருக்கு உதவியவர்களை தேடி, தலிபான் பயங்கரவாதிகள் வீடு வீடாக சென்று சோதனை நடத்துவதாக ஐ.நா.,வின் ரகசிய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க வெளியேற்றத்தை தொடர்ந்து, ஆப்கனில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால், ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர். அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்தாலும், ஆயிரக்கணக்கானோர் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தலிபான்களின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தயாரித்த ரகசிய அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதை தயாரித்தவர்கள், தங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேடோ படைகளுக்கு உதவி செய்தவர்களை வீடு வீடாக சென்று தலிபான்கள் தேடி வருகின்றனர்.
காபூல் விமான நிலையம் நோக்கி செல்பவர்களையும் மிரட்டி வருகின்றனர். தங்களின் பேச்சை கேட்காதவர்களை ஷரியத் சட்டத்தின்படி தண்டனை வழங்குகின்றனர். நேடோ மற்றும் அமெரிக்க படைகளுக்கு உதவியர்கள், இணைந்து செயல்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, தலிபான்கள் கொடுமைப்படுத்தும் அபாயம் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.


latest tamil news




நிருபர்கள் உறவினர் சுட்டுக்கொலை


இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ‛ டெயுட்சே வெல்லே' பத்திரிகை நிருபர்கள் இருவரை, அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று தலிபான்கள் வீடு வீடாக சோதனை நடத்தினர். ஆனால், தற்போது அவர்கள் ஜெர்மனிக்கு சென்று விட்டனர். அவர்கள் கிடைக்காத கோபத்தில், நிருபர்களின் உறவினர்கள் மீது கடுமையாக தாக்கினர். அதில், ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். சிலர் தப்பி சென்று விட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஆக-202108:36:43 IST Report Abuse
பேசும் தமிழன் அவர்களுக்கு 4 போதவில்லை... 72 இப்போதே வேண்டும் என்று கணக்கு எடுக்க கிளம்பி விட்டார்கள் போலும்
Rate this:
Cancel
21-ஆக-202107:11:30 IST Report Abuse
சந்திரசேகர் சுதந்திரத்தின் வலிமை அதன் இன்பம் அதை இழந்த பின்பு தான் தெரியும்.
Rate this:
Cancel
மோகன் - கென்ட்,யுனைடெட் கிங்டம்
20-ஆக-202122:27:09 IST Report Abuse
மோகன் நம்ம டைரக்டர் அமீர் அங்க போனான்... அவனை ஆப்கான் அனுப்பி வைக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X