அரசியல் செய்தி

தமிழ்நாடு

2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை: செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (110)
Share
Advertisement
சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் ரூ.85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன்
Coal, Missing, Thermal PowerPlant, Minister, Senthil Balaji, செந்தில் பாலாஜி, அனல்மின் நிலையம், நிலக்கரி

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் ரூ.85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதிற்கும் இருப்பில் உள்ளதிற்கும் வித்தியாசம் இருக்கின்றது. நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே இந்தத் தவறில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.


latest tamil news


மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இந்த மின்துறையில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் தெரியவரும்போது உள்ளபடியே கடந்த அதிமுக ஆட்சியை நினைத்து வருத்தப்படுவதா? அல்லது அந்த நிர்வாக திறமையைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு ஒரு மோசமான நிர்வாகம் செயல்பட்டிருக்கிறது. இதேபோல், தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆய்விற்கு பிறகு அதன் உண்மை நிலையும் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
21-ஆக-202101:29:55 IST Report Abuse
Arachi ரொம்ப சிம்பிள் கண்டுபிடிக்கிறது.ராஜேந்திர பாலாஜிக்கிடட கேடடா பதில் கிடைசிடும் அவர் தான் சமீபத்தில் ஒன்றைஅரை டன் ஸ்வீட் எடுத்திட்டுபோனது
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
20-ஆக-202121:56:36 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இத கண்டுபுடிக்கிறதுக்கு நூறு நாளுக்கு மேல ஆச்சி ? மிரட்டல் டீலுக்கு அவனுக ஒத்து வரலையோ ?
Rate this:
Cancel
20-ஆக-202121:48:17 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அசிங்க பட்டங்கள் சிங்கி பசங்கள் என்னவோ அணில் உருட்டி விட்டது என்று கிண்டல் செய்த பெபுழுதி க்கு எல்லாம் தங்கமணி ஏற்கனவே தெரியும் என்று சொன்நார் அப்போ எந்த அணில்டா உருட்டுச்சி சிங்கி பசங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X