சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி நபர்கள் மூலம் நிலத்தை அபகரித்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருச்சி : போலி நபர்கள் மற்றும் போலி ஆவணங்கள் மூலம், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை வாங்கியவரை நில அபகரிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அசூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி பானுமதி, 60. பரமசிவம் கடந்த 2009ம் ஆண்டு இறந்து விட்டார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள்.இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடைசி பெண்ணை திருமணம் செய்ய

திருச்சி : போலி நபர்கள் மற்றும் போலி ஆவணங்கள் மூலம், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை வாங்கியவரை நில அபகரிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அசூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி பானுமதி, 60. பரமசிவம் கடந்த 2009ம் ஆண்டு இறந்து விட்டார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள்.இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடைசி பெண்ணை திருமணம் செய்ய பணம் தேவைப்பட்டதால், திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஐ.டி., பார்க் அருகில் உள்ள, ஒன்றரை ஏக்கர் நிலத்தை விற்க பானுமதி முடிவு செய்தார். அப்போது நிலம் தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவணங்களை சரிபார்த்தபோது, அந்த நிலம், திருச்சி, அல்லுாரைச் சேர்ந்த ஸ்ரீதர், 45, என்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் பெயரில் இருந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த பானுமதி கடந்த, 2019ம் ஆண்டு, திருச்சி மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பரமசிவம் இறந்ததை அறிந்த ஸ்ரீதர், அதே பெயர் கொண்ட வேறு ஒரு பரமசிவத்தின் குடும்பத்தினரை வைத்து, ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலமாகவும், நிலத்தை தனது பெயருக்கு மாற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து திருச்சி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பானுமதி குடும்ப நிலத்தை தனது பெயருக்கு போலி நபர்கள், போலி ஆவணங்கள் மூலம் மாற்றிய ஸ்ரீதர், அவருக்கு உதவியாக இருந்த தங்கம், 65, என்ற பெண், அவரது மகள்கள் ஆனந்தி, 40, நிர்மலாதேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, ஸ்ரீதர் மற்றும் ஆனந்தியை கைது நேற்று கைது செய்தனர். தலைமறைவான நிர்மலா தேவி மற்றும் அவரது தாய் தங்கத்தை தேடி வருகின்றனர்.

ஸ்ரீதர் மோசடியாக பதிவு செய்த நிலத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய்.மோசடிக்கு உதவிய அண்ணன்: ஸ்ரீதரின் சகோதரர் குருமூர்த்தி என்பவர் திருவெறும்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தபோது தான், இந்த மோசடி நடந்துள்ளது. இதேபோல் பலரின் நிலங்களை மோசடியாக ஸ்ரீதர் வாங்கி உள்ளதும், அதற்கு அவரது அண்ணன் உதவியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X