வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மத்திய அமைச்சர் உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மத்திய அமைச்சர் உறுதி

Added : ஆக 20, 2021
Share
திருப்பூர் : ''பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகளுடன் விரைந்து வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்,'' என, மத்திய அமைச்சர் பியுஸ்கோயல் உறுதி அளித்துள்ளார்.மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியுஸ்கோயல், நாடு முழுவதும் உள்ள பல்வேறு கவுன்சில் தலைவர்களுடன் நேற்று ஆன்லைனில் கலந்துரையாடினார்.ஆயத்த ஆடை ஏற்றுமதிமேம்பாட்டு கழக(ஏ.இ.பி.சி.,)

திருப்பூர் : ''பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகளுடன் விரைந்து வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்,'' என, மத்திய அமைச்சர் பியுஸ்கோயல் உறுதி அளித்துள்ளார்.
மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியுஸ்கோயல், நாடு முழுவதும் உள்ள பல்வேறு கவுன்சில் தலைவர்களுடன் நேற்று ஆன்லைனில் கலந்துரையாடினார்.ஆயத்த ஆடை ஏற்றுமதிமேம்பாட்டு கழக(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர் கோயல், ''பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன், வரியில்லா வர்த்தகத்துக்கான பேச்சு நடக்கிறது. விரைந்து பேசி முடித்து, ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். வங்கி, கன்டெய்னர் சார்ந்த பிரச்னைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வட்டி சமநிலை திட்ட கால அவகாசம் நீட்டிக்கப்படும். நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி 30 லட்சம் கோடி ரூபாய் என்கிற இலக்கை அடையும்,'' என, உறுதி அளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X