சம்பவம் செய்தி

தமிழ்நாடு

100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி முடித்த கிராமம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடித்த கிராம பஞ்சாயத்து சார்பில், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் யூனியனுக்கு உட்பட்ட சோழன்மாளிகை பஞ்சாயத்தில், 9 வார்டுகள் உள்ளன. இதில், 962 வீடுகளும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 1,950 பேரும் கிராமத்தில் வசிக்கின்றனர். இந்த பஞ்சாயத்தில், கொரோனா தடுப்பூசி

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடித்த கிராம பஞ்சாயத்து சார்பில், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் யூனியனுக்கு உட்பட்ட சோழன்மாளிகை பஞ்சாயத்தில், 9 வார்டுகள் உள்ளன. இதில், 962 வீடுகளும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 1,950 பேரும் கிராமத்தில் வசிக்கின்றனர். இந்த பஞ்சாயத்தில், கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தி முடிக்கப்பட்ட நிலையில், நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தில், சுகாதார பணியாளர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில், பஞ்சாயத்து தலைவர் ஜெயக்குமார், பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் பிரேமா, துணை மருத்துவமனை மருத்துவ அலுவலர் புனிதவதி மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து பட்டீஸ்வரம் அரசு வட்டார துணை மருத்துவமனை மருத்துவ அலுவலர் புனிதவதி கூறியதாவது:

பட்டீஸ்வரம் வட்டார துணை சுகாதார நிலையத்தின் கீழ், 11 பஞ்சாயத்துகள் வருகிறது. இதில், சோழன்மாளிகை பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர். கடந்த ஆக., 4ம் தேதி முதல், ஆக., 14 ம் தேதி வரை வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்படி, 18 வயது நிரம்பிய 1,950 பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டது. தற்போது, 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. இதன் விவரத்தை கலெக்டருக்கு அனுப்பியுள்ளோம். தமிழகத்தில், 100 சதவீதம் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்ட பஞ்சாயத்தில், மூன்றாவது இடத்தில் இருப்பது சுகாதாரத்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கூறினார்.

கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெயக்குமார் கூறுகையில், ''கிராம மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டியதால், சுகாதார பணியாளர்கள் ஒத்துழைப்புடன் கிராமத்தில், நுாறு சதவீதம் தடுப்பூசி என்பது சாத்தியமானது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X