பொது செய்தி

தமிழ்நாடு

போலி நிருபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கோவை : 'பத்திரிகையாளர்கள் எனக்கூறி தவறான செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கோவை கலெக்டர் சமீரன் எச்சரித்துள்ளார்.கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்ட அறிக்கை:அன்னுாரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வின்போது, ஒரு சிலர் வீடியோ எடுத்து அதை, 'எடிட்' செய்து வெளியிட்டது மட்டுமின்றி, உண்மையை திரித்தும் பரப்பி விட்டனர். இதனால் பல்வேறு


கோவை : 'பத்திரிகையாளர்கள் எனக்கூறி தவறான செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கோவை கலெக்டர் சமீரன் எச்சரித்துள்ளார்.
கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்ட அறிக்கை:

அன்னுாரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வின்போது, ஒரு சிலர் வீடியோ எடுத்து அதை, 'எடிட்' செய்து வெளியிட்டது மட்டுமின்றி, உண்மையை திரித்தும் பரப்பி விட்டனர். இதனால் பல்வேறு தரப்பினர் இடையே குழப்பமும், தேவையற்ற பிரச்னைகளும் ஏற்பட்டன. குறிப்பிட்ட அந்த நபரின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பல்வேறு பத்திரிகையாளர்கள், நடுநிலை தவறாமல் போற்றுதலுக்குரிய களப்பணியாற்றி வருகின்றனர்.

ஆங்காங்கே ஒரு சிலர் செய்தியாளர்கள் என கூறிக்கொண்டு, சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், மக்கள் நலன் சார்ந்த செய்திகளை வெளியிடும் கண்ணியமிக்க பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்துவதாகவும், அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், புகார்கள் வந்துள்ளன.
இது போன்ற புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கும், போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் எனக்கூறி தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீதான புகார்களை 93852 14793 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு குறுந்தகவல் மற்றும் மனுக்களை ஆதாரங்களுடன் அளிக்கலாம்.

இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X