மலிவு விலையில் பெட்ரோல்; ஆப்கான் செல்ல பா.ஜ., பிரமுகர்கள் யோசனை

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: 'மலிவு விலையில் பெட்ரோல் தேவைப்பட்டால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள்' என, மத்தியப் பிரதேச காட்னி மாவட்ட பா.ஜ., தலைவரும், பிகார் மாநில பா.ஜ., எம்.எல்.ஏ.,வும் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேசத்தில் கடந்த 18 ம் தேதி பா.ஜ., தரப்பில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் பங்கேற்ற காட்னி மாவட்ட பா.ஜ., தலைவர் ராம்ரத்தன் பாயலிடம் செய்தியாளர்கள் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி
Taliban, Afghanistan, petrol , BJP leader, inflation, பெட்ரோல் விலை உயர்வு, மலிவு விலை, பெட்ரோல், ஆப்கான்,  யோசனை, பாஜ பிரமுகர்கள்,

புதுடில்லி: 'மலிவு விலையில் பெட்ரோல் தேவைப்பட்டால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள்' என, மத்தியப் பிரதேச காட்னி மாவட்ட பா.ஜ., தலைவரும், பிகார் மாநில பா.ஜ., எம்.எல்.ஏ.,வும் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 18 ம் தேதி பா.ஜ., தரப்பில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் பங்கேற்ற காட்னி மாவட்ட பா.ஜ., தலைவர் ராம்ரத்தன் பாயலிடம் செய்தியாளர்கள் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர்.


latest tamil news


அதற்கு அவர், 'மலிவு விலையில் பெட்ரோல் தேவைப்பட்டால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்குக் கிடைக்கும். ஆனால், என்ன அதனால் ஒரு பயனும் இல்லை. இந்தியாவில் குறைந்தபட்சம் பாதுகாப்பாகவாவது இருக்கிறீர்கள். இந்தியாவில் கோவிட் 3வது அலை தாக்க உள்ளது. நாடு மீண்டும் கடினமான காலத்தை எதிர்கொள்ள இருக்கிறது. ஆனால் நீங்கள் பெட்ரோல் விலை குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்' எனக் காட்டமாகப் பதிலளித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதேபோல், பீஹார் மாநில பா.ஜ., எம்.எல்.ஏ., ஹரிபூஷண் தாக்கூர் பெட்ரோல், டீசல் விலை குறித்த கேள்விக்கு, 'இந்தியாவில் இருக்க யாருக்கெல்லாம் அச்சமாக இருக்கிறதோ அவர்களெல்லாம் ஆப்கானிஸ்தான் செல்லலாம். அங்கு டீசல், பெட்ரோல் விலை கூட குறைவுதான்' எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamin - Chrnnai,இந்தியா
21-ஆக-202109:43:29 IST Report Abuse
Thamin Afganisthan la weapon na vechi makkala payapathuranga . India ya la price rate increase panni payapathuranga.... Valga BGP
Rate this:
Cancel
21-ஆக-202109:11:56 IST Report Abuse
முருகன் இவர்களுக்கு பெட்ரோல் 200 க்கு விற்றாலும் கவலையில்லை என்பதேயே காட்டுகிறது
Rate this:
Cancel
21-ஆக-202105:47:11 IST Report Abuse
முருகன் ஆப்கானிஸ்தானுக்கு அரசியல்வாதிகளை தான் அனுப்ப வேண்டும். சாதாரண மக்கள் தினமும் ஒரு 300 வருமானம் பெற பாடும் வேதனை தெரியமால் பேசுவதற்காக . அதில் குறைத்தாது 100 எரிபொருளுக்கு செலவாகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X