காபூலில் இருந்து ஒரே நாளில் 3,000 அமெரிக்கர்கள் மீட்பு

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒரே நாளில் 11 விமானங்கள் மூலம் 3,000 பேர் காபூல் விமான நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகள்
US, evacuates,  Afghanistan,  தலிபான்கள், ஆப்கானிஸ்தான்,  விமானங்கள்,   அமெரிக்கர்கள், காபூல், மீட்பு,

காபூல்: ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒரே நாளில் 11 விமானங்கள் மூலம் 3,000 பேர் காபூல் விமான நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகள் வெளியேறினர். பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டு வர ஒவ்வொரு நாடும் விமானத்தை அனுப்பி வருகிறது. அமெரிக்காவும் அங்கு பணியாற்றிய தங்கள் நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள், வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் என பலரையும் தொடர்ந்து அழைத்து வருகிறது.


latest tamil news



இதுகுறித்து இன்று (ஆக., 20) அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளதாவது:ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய பிறகு தொடர்ந்து அமெரிக்க மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து இதுவரை 14 ஆயிரம் பேர் அமெரிக்கா திரும்பியுள்ளனர். ஆக., 14-ம் தேதியில் இருந்து 9,000 பேர் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 11 விமானப்படை விமானங்கள் காபூலில் இருந்து இயக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 3,000 அமெரிக்கர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Bandar Seri Begawan,புருனே
21-ஆக-202106:22:32 IST Report Abuse
Murugan அமெரிக்கா முன் யோசனை இன்றி அனைவரையும் இன்னலுக்கு உள்ளாக்கி விட்டது.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
20-ஆக-202118:09:20 IST Report Abuse
 N.Purushothaman அமெரிக்க வீரர்களிடம் தங்கள் குழந்தைகளையாவது இங்கு இருந்து கொண்டு செல்லுங்கள் என்று சில பெற்றோர்கள் அழுதுகொண்டே உருகி கெஞ்சி கேட்டு கொண்டது எவ்வளவு வேதனையான தருணம் .....இது போற நெருடலான விஷயங்கள் எல்லாம் தமிழக கூலிபான்கள் நடத்தும் செய்தி சேனல்களில் வெளியாகாது ....மாறாக ஜாலிபான்களை புகழும் வைபவம் கண ஜோராக நடக்கும் .....இந்தியா மட்டுமே மீட்ப்பு விமானங்களை அனுப்பி எந்த நாட்டவர்கள் என்றில்லாமல் அனைவரையும் இந்தியாவிற்கு அழைத்து கொண்டு வருகிறார்கள் ....அதில நிறைய ஆப்கான் மக்களும் வருகின்றனர் ....பயங்கராவதிகளின் கைகளால் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதற்கு ஜாலிபான்கள் மற்றொரு சாட்சி ....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஆக-202121:30:46 IST Report Abuse
தமிழவேல் எதுக்கு மூர்கன்களை இங்கே கொண்டுவரனும் ? அப்புறமா ரோகிங்கா நிலைமை வரவா ?...
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
20-ஆக-202117:20:40 IST Report Abuse
DVRR முக்காடு தாடியை பார்த்தால் அப்படி தெரியவில்லையே ஆபிகானியர்கள் அதாவது முஸ்லிம்கள் மாதிரித்தானே தெரியுது கணிசமாக இவர்கள் எப்படி அமெரிக்கர்கள் ஆக முடியும் அப்போ அங்கே கிறீன் கார்டு வாங்கியவர்களா இவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X