சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகன் திருப்பித் தராத கடனுக்காக பெற்றோரை சிறை வைத்தவர் கைது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கே.வி. குப்பம்: கே.வி. குப்பம் அருகே, மகன் திருப்பித் தராத கடனுக்காக பெற்றோரை சிறை வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே ஆலங்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம், 51. இவர் கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார், 50, என்பவருக்கு 6 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.பலமுறை தர்மலிங்கம் கேட்டும் அசலையும், வட்டியையும் பிரேம்குமார்

கே.வி. குப்பம்: கே.வி. குப்பம் அருகே, மகன் திருப்பித் தராத கடனுக்காக பெற்றோரை சிறை வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே ஆலங்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம், 51. இவர் கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார், 50, என்பவருக்கு 6 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.பலமுறை தர்மலிங்கம் கேட்டும் அசலையும், வட்டியையும் பிரேம்குமார் தரவில்லை.

இந்நிலையில், இன்று காலை பிரேம்குமார் வீட்டுக்கு தர்மலிங்கம் சென்ற போது அவர் இல்லை. இதனால் ஆத்திரமடைந்து பிரேம்குமாரின் தந்தை தேவேந்திரனையும், 70, தாய் மஞ்சுளாவையும், 65, வீட்டுக்குள் வைத்து பூட்டி சிறை வைத்தார். தகவல் அறிந்த கே.வி. குப்பம் போலீசார் கதவை உடைத்து அவர்களை மீட்டனர். புகார்படி தர்மலிங்கத்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X