சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணப்பெண் தாலியுடன் ஓட்டம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் அருகே, இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் தாலி, நகையுடன் ஒட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் சடகோபன், 60. அவர் மகன் கண்ணகி, 20. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தாய் மாமன் ராமனுக்கும், 30, விரிஞ்சிபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று 20 திருமணம் நடக்க இருந்தது.நேற்று 19 இரவு திருமண வரவேற்பு, விருந்து

வேலுார்: வேலுார் அருகே, இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் தாலி, நகையுடன் ஒட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் சடகோபன், 60. அவர் மகன் கண்ணகி, 20. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தாய் மாமன் ராமனுக்கும், 30, விரிஞ்சிபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று 20 திருமணம் நடக்க இருந்தது.நேற்று 19 இரவு திருமண வரவேற்பு, விருந்து நடந்தது. இதில் இரு தரப்பு உறவினர்கள் பங்கேற்றனர்.பின் இரவு 11:00 மணிக்கு அனைவரும் துாங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3:00 மணிக்கு பெண் வீட்டார் எழுந்து பார்த்த போது மணப்பெண்ணை காணவில்லை. திருமணத்திற்காக செய்து வைத்திருந்த 5 பவுன் தாலி, 10 பவுன் நகையையும் காணவில்லை. இதனால் நகை, தாலியுடன் பெண் மாயமானது தெரியவந்தது.இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டு இரு தரப்பு உறவினர்களும் விரக்தியில் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X