கைதியை தப்ப விட்ட எஸ்.ஐ., 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைதியை தப்ப விட்ட எஸ்.ஐ., 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

Added : ஆக 20, 2021
Share
வேலுார்: குடியாத்தத்தல் கைதியை தப்ப விட்ட எஸ்.ஐ., இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.வேலுார் மாவட்டம், மேல்பட்டியை சேர்ந்தவர்கள் மோகன், ராஜேந்திரன். இவர்களுக்குள் நிலத்தகராறு காரணமாக அடிக்கடி மோதல்கள் நடந்தது. இதில் மோகனின் மகன் சிவராமன், மனைவி பிரியா ஆகியோர் பைக்கில் சென்றனர். அப்போது ராஜேந்திரன் மகன் சத்தியராஜ், 30, வழிமறித்து அரிவாளால் வெட்டினார்.மேல்பட்டி



வேலுார்: குடியாத்தத்தல் கைதியை தப்ப விட்ட எஸ்.ஐ., இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், மேல்பட்டியை சேர்ந்தவர்கள் மோகன், ராஜேந்திரன். இவர்களுக்குள் நிலத்தகராறு காரணமாக அடிக்கடி மோதல்கள் நடந்தது. இதில் மோகனின் மகன் சிவராமன், மனைவி பிரியா ஆகியோர் பைக்கில் சென்றனர். அப்போது ராஜேந்திரன் மகன் சத்தியராஜ், 30, வழிமறித்து அரிவாளால் வெட்டினார்.மேல்பட்டி எஸ்.எஸ்.ஐ., சங்கரன், போலீஸ்காரர்கள் பாலாஜி, ஜலாலுதீன் ஆகியோர் சத்தியராஜை கைது கடந்த 18 ம் தேதி இரவு 11:00 மணிக்கு குடியாத்தம் நீதிபதிகள் குடியிருப்புக்கு அழைக்கு வந்து நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர்.

பின் குடியாத்தம் கிளை சிறையில் அடைக்க அவரை அழைத்து சென்றனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு சத்தியராஜ் தப்பியோடினார். குடியாத்தம் போலீசார் மூன்று தனிப்படை அமைத்து சத்தியராஜை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பணியின் போது அஜாக்கிரதையாக இருந்து கைதியை தப்ப விட்ட குற்றத்திற்காகமேல்பட்டி எஸ்.எஸ்.ஐ., சங்கரன், போலீஸ்காரர்கள் பாலாஜி, ஜலாலுதீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., செல்வகுமார் இன்று உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X