பொது செய்தி

தமிழ்நாடு

வரலட்சுமி விரதம் எதிரொலி; மல்லிகை பூ கிலோ ரூ.2,000

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சத்தி, புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை எகிறியது. சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், மல்லிகை, முல்லை மலர் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கிருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு

புன்செய்புளியம்பட்டி: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சத்தி, புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை எகிறியது. சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், மல்லிகை, முல்லை மலர் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கிருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆடி மாதம் பூக்களின் தேவை குறைந்ததால் விலையும் சரிந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக விலை குறைந்து விற்ற பூக்கள், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நேற்று விலை அதிகரித்து விற்றது. நேற்று முன்தினம் கிலோ, 1,000 ரூபாய்க்கு விற்ற மல்லிகை, நேற்று, 2,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ, 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, நேற்று, 280 ரூபாய்க்கு விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X