பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்; 16 பேர் கைது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புளியம்பட்டி: சத்தியமங்கலம் அருகே, விதவை பெண்ணின் வீட்டை சூறையாடியவர்களை கைது செய்ய கோரி, உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர்.சத்தியமங்கலம் அருகே பெரியகுளத்தை சேர்ந்தவர் தேன்மொழி. கணவர் இறந்து விட்ட நிலையில், மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தேன்மொழிக்கும், அதே பகுதியில் உள்ள மற்றொரு தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு உள்ளது. சில

புளியம்பட்டி: சத்தியமங்கலம் அருகே, விதவை பெண்ணின் வீட்டை சூறையாடியவர்களை கைது செய்ய கோரி, உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர்.


சத்தியமங்கலம் அருகே பெரியகுளத்தை சேர்ந்தவர் தேன்மொழி. கணவர் இறந்து விட்ட நிலையில், மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தேன்மொழிக்கும், அதே பகுதியில் உள்ள மற்றொரு தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு உள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஒரு தரப்பினர் தேன்மொழி குடியிருந்த வீட்டை சூறையாடியுள்ளனர். இதையடுத்து, வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சத்தி போலீசார் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த தேன்மொழியின் குடும்பத்தினர், உறவினர்கள் என, 16 பேர் நேற்று சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டி.எஸ்.பி., சுப்பையா, இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். மறியலில் ஈடுபட்ட, 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், வீட்டை சேதப்படுத்தியது தொடர்பாக, விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X