பொது செய்தி

தமிழ்நாடு

அரசியலமைப்பு உரிமை கல்வி திட்டம்: 10 மலை கிராமத்தில் செயல்படுத்த முடிவு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஈரோடு: அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை, மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் வகையிலான திட்டத்தை, ஈரோடு மாவட்டத்தில் பத்து மலை கிராமங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்திய அரசியலமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு சம உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கூடி வாழும் உரிமை, வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதி கோரும் உரிமை என பல அடிப்படை உரிமைகளை

ஈரோடு: அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை, மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் வகையிலான திட்டத்தை, ஈரோடு மாவட்டத்தில் பத்து மலை கிராமங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்திய அரசியலமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு சம உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கூடி வாழும் உரிமை, வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதி கோரும் உரிமை என பல அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. இந்த உரிமைகள் குறித்து, குழந்தை பருவத்திலேயே கற்று கொடுக்கும் வகையில், 'அரசியலமைப்பு உரிமை கல்வி திட்டம்' எனும் தொலைநோக்கு திட்டம், தமிழகம் மற்றும் புதுவையில், 15 மாவட்டங்களில், 125 கிராமங்களில் வரும், 21ல் துவங்க உள்ளது. இத்திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பத்து மலை கிராமங்களில் சுடர் தொண்டு நிறுவனம் முன்னெடுத்து நடத்துகிறது. பர்கூர் பகுதியில் உள்ள கொங்காடை, தம்புரட்டி, தாமரைக்கரை, பர்கூர், தேவர்மலை ஆகிய மலை கிராமங்களிலும், கடம்பூர் பகுதியில் பவளகுட்டை, அட்டணை, ஒசப்பாளையம், கானகுந்தூர், நகலூர் என பத்து மலை கிராமங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக, சுடர் தொண்டு நிறுவன இயக்குனர் நடராஜ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X