பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த அவகாசம் தேவை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஈரோடு: வங்கிகளில் பெறப்பட்ட கடன், வட்டிகளை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுபற்றி, இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில குழு உறுப்பினர் முருகேஷ், முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவல் காரணமாக, நோய் தடுப்பு நடவடிக்கையால் மாலை, 5:00 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படுகிறது. இதனால் கடை

ஈரோடு: வங்கிகளில் பெறப்பட்ட கடன், வட்டிகளை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுபற்றி, இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில குழு உறுப்பினர் முருகேஷ், முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவல் காரணமாக, நோய் தடுப்பு நடவடிக்கையால் மாலை, 5:00 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படுகிறது. இதனால் கடை உரிமையாளர்கள், சாலை ஓர வியாபாரிகள் பாதித்துள்ளனர். இதற்கிடையில், வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ், மகளிர் குழு மூலம் பெறப்பட்ட கடன்களை திரும்ப செலுத்த மக்கள் சிரமப்படுகின்றனர். சில இடங்களில் ஜப்தி நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. எனவே, அவற்றை திரும்ப செலுத்த போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X