மாவட்டத்தில் ஏழு மாதங்களில் 59 போக்சோ வழக்கு பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் ஏழு மாதங்களில் 59 போக்சோ வழக்கு பதிவு

Added : ஆக 20, 2021
Share
ஈரோடு: ''ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏழு மாதத்தில், 59 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,'' என, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, கோபி, பவானிசாகர், சத்தியமங்கலம் பகுதியில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. காக்கும் கரங்கள் என்ற குழு மூலம், மலை கிராம மக்களிடையே குழந்தை

ஈரோடு: ''ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏழு மாதத்தில், 59 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,'' என, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி கூறினார்.


மேலும் அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, கோபி, பவானிசாகர், சத்தியமங்கலம் பகுதியில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. காக்கும் கரங்கள் என்ற குழு மூலம், மலை கிராம மக்களிடையே குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இதனால், தற்போது குழந்தை திருமணம் குறைந்துள்ளது. கடந்த ஜன., முதல் ஜூலை வரை, 10 குழந்தைகள் திருமணம் செய்ததாக வழக்கு பதிவானது. 59 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளது. இருப்பினும், கடந்த இரு மாதங்களாக போக்சோ வழக்குகள் குறைந்து வருகிறது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, முதல்வர் நிவாரண உதவியாக இதுவரை நான்கு குழந்தைகளுக்கு தலா, ஐந்து லட்சம் வீதம், 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதே இழப்பு தொடர்பாக, 167 விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. குழந்தை திருமணங்கள் குறித்த பிரச்னை தொடர்பாக, ஈரோடு காந்திஜி வீதியில் உள்ள ஜவான்ஸ் பவன் இரண்டாம் தளத்தில் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். புகார்களை, 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X