பொது செய்தி

தமிழ்நாடு

கீழ்பவானி வாய்க்கால் மதகு பகுதியில் உடைப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு அடுத்த, நசியனூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, வீடுகள் உள்ள பகுதியில் தண்ணீர் புகுந்தது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக கடந்த, 15ல் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை, 1,000 கனஅடி வீதம் தண்ணீர் சென்றது. நேற்று இரவு, ஈரோடு அடுத்த நசியனூரில் இருந்து காஞ்சிகோவில் செல்லும் சாலையில், மலப்பாளையம் என்ற

ஈரோடு: ஈரோடு அடுத்த, நசியனூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, வீடுகள் உள்ள பகுதியில் தண்ணீர் புகுந்தது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக கடந்த, 15ல் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை, 1,000 கனஅடி வீதம் தண்ணீர் சென்றது. நேற்று இரவு, ஈரோடு அடுத்த நசியனூரில் இருந்து காஞ்சிகோவில் செல்லும் சாலையில், மலப்பாளையம் என்ற இடத்தில், 55வது மைலில் மதகின் கீழ் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீடுகள் உள்ள பகுதிக்கு சென்றது. இரவு, 7:00 மணிக்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வரத்துவங்கியதும், பொதுப்பணித்துறைக்கு அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். அங்கு வந்த பொதுப்பணித்துறையினர், பொக்லைன் இயந்திரம் மூலம் உடைப்பு ஏற்பட்ட இடத்தை கண்டறிந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி, பொதுப்பணித் துறையினர் கூறுகையில், 'அவ்விடத்தில் கண்வெட்டு எனப்படும் மதகு பகுதி சீரமைப்பு பணி செய்துள்ளோம். அங்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதாக அறிந்துள்ளோம். மோட்டார் வைத்து தண்ணீர் செல்லும் அளவில் மட்டுமே உடைப்பு மூலம் தண்ணீர் வெளியேறுகிறது. அச்சப்படும் படி இல்லை,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X