பொது செய்தி

தமிழ்நாடு

புளியம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புளியம்பட்டி: விவசாயியை தாக்கிய கிராம உதவியாளர், வி.ஏ.ஓ.,வை கைது செய்ய வலியுறுத்தி, புளியம்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், விவசாயி கோபால்சாமியை கிராம உதவியாளர் முத்துசாமி சரமாரியாக தாக்கி, தகாத வார்த்தைகள் பேசும் வீடியோ வெளியானது. இந்நிலையில், கோபால்சாமி மீதான

புளியம்பட்டி: விவசாயியை தாக்கிய கிராம உதவியாளர், வி.ஏ.ஓ.,வை கைது செய்ய வலியுறுத்தி, புளியம்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், விவசாயி கோபால்சாமியை கிராம உதவியாளர் முத்துசாமி சரமாரியாக தாக்கி, தகாத வார்த்தைகள் பேசும் வீடியோ வெளியானது. இந்நிலையில், கோபால்சாமி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்பட, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கிராம உதவியாளர் முத்துசாமி, வி.ஏ.ஓ., கலைச்செல்வி ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X