சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பேராசிரியர் வீட்டில் நகை திருடிய இருவர் கைது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில், 23.5 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு, பழையபாளையம் கே.சி.பி. சின்னவர் வீதியை சேர்ந்தவர் சண்முகவேல், 59, ஓய்வு பெற்ற பேராசிரியர். கடந்த ஜூலை, 14ல் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் தாடிக்கொம்பு பாலமுருகன் கோவிலுக்கு சென்றார். மறுநாள் நள்ளிரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின்

ஈரோடு: ஈரோட்டில், ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில், 23.5 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு, பழையபாளையம் கே.சி.பி. சின்னவர் வீதியை சேர்ந்தவர் சண்முகவேல், 59, ஓய்வு பெற்ற பேராசிரியர். கடந்த ஜூலை, 14ல் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் தாடிக்கொம்பு பாலமுருகன் கோவிலுக்கு சென்றார். மறுநாள் நள்ளிரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 23.5 பவுன் நகை, 10 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் பல்வேறு கட்ட விசாரணையில் இறங்கினர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் திருப்பத்தூர் பேரம்பட்டு பகுதியை சேர்ந்த சேகர் மகன் அரவிந்த், 21, அதேபகுதியை சேர்ந்த பச்சமுத்து மகன் தமிழ்வாணன், 21, ஆகிய இருவரை வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், எஸ்.ஐ.,க்கள் பழனிவேல், பெரியசாமி, எஸ்.எஸ்,ஐ. பழனிசாமி, காவலர் மூர்த்தி ஆகியோர் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், சண்முகவேல் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இருவரையும் நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X