பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்: சேலம் மாவட்டத்துக்கு ரூ.4 கோடி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், 2021 - 22 நிதியாண்டில், மத்திய, மாநில அரசுகளின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், மக்காச்சோளம், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியம், பருத்தி, கரும்பு, மரப்பயிர்கள் திட்டங்களில், உழவர் நலத்துறை மூலம், 4.44 கோடி ரூபாய் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில், சான்று விதை

சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், 2021 - 22 நிதியாண்டில், மத்திய, மாநில அரசுகளின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், மக்காச்சோளம், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியம், பருத்தி, கரும்பு, மரப்பயிர்கள் திட்டங்களில், உழவர் நலத்துறை மூலம், 4.44 கோடி ரூபாய் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில், சான்று விதை வினியோகம், விதை உற்பத்தி, தொகுப்பு செயல் விளக்க திடல், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை உரங்கள், சுழற்கலப்பை, மருந்து தெளிப்பான், நீர் பாசன குழாய், விவசாயிகளுக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு இனங்களில் மானியம் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X