நுண்கலைகளின் நாயகன் முருகேசன்

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021
Share
Advertisement
கொரோனா காரணமாக வெறிச்சோடிப் போயிருந்த சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமி என்ற கலைக்கூடம் மீண்டும் உயிர்பெற்று இருக்கிறதுஅரங்கம் அழகான ஒவியங்களாலும் சிற்பங்களாலும் பெயிண்டிங்களாலும் நிறைந்து வழிகிறதுஇதற்கு காரணமானவர் புகழ் பெற்ற ஒவியரும் சிற்பக்கலைஞருமான முருகேசன்88 வயதிலும் ஒவியம் வரையும் திறன் கொண்ட இவரது படைப்புகள் மேலோட்டமாக



latest tamil news



கொரோனா காரணமாக வெறிச்சோடிப் போயிருந்த சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமி என்ற கலைக்கூடம் மீண்டும் உயிர்பெற்று இருக்கிறது


latest tamil news


அரங்கம் அழகான ஒவியங்களாலும் சிற்பங்களாலும் பெயிண்டிங்களாலும் நிறைந்து வழிகிறது
இதற்கு காரணமானவர் புகழ் பெற்ற ஒவியரும் சிற்பக்கலைஞருமான முருகேசன்
88 வயதிலும் ஒவியம் வரையும் திறன் கொண்ட இவரது படைப்புகள் மேலோட்டமாக பார்க்காமல் ஆழமான கண்ணேட்டத்துடன் பார்க்க வேண்டும் அப்போதுதான் இந்த அபாரமான கலைஞர் சொல்லவந்தது புரியும்.
மதுரையில் பிறந்து வளர்ந்தவரான இவர் ஏட்டுக்கல்வி படித்தவர் ஒலைச்சுவடியில் எழுதி படிப்பதைத்தான் ஏட்டுக்கல்வி என்பர்.
ஒரு பத்திரிகையில் வந்த நேதாஜியின் படத்தை பார்த்து வரையவேண்டும் என்று மனது துாண்ட ஏட்டில் அவர் முதன் முதலாக வரைந்த ஒவியம் நேதாஜியுடையதாகும்..
வீட்டில் மாட்டியிருந்த அந்த ஒவியத்தை பார்த்து பலரும் பாராட்ட அவரது நாட்டம் ஒவியத்தின் மீது சென்றது


latest tamil news


Advertisement

அவருக்கு ஒவியத்தை முறையாக கற்றுக்கொள்ள ஒவியக்கல்லுாரி இருப்பது அப்போது தெரியாது ஒரு விளம்பரத்தை பார்த்துதான் சேர்ந்தார் ஆனால் சேர்ந்த பிறகு கல்லுாரியின் சிறந்த மாணவரானார்.


latest tamil news


அது மட்டுமல்ல தான் படித்த கல்லுாரியிலேயே ஒவிய ஆசிரியராகவும் வேலை பார்த்தார் பின்னர் படிப்படியாக உயர்ந்து கல்லுாரியின் முதல்வராக ஒய்வு பெற்றார்.


latest tamil news


இன்று என்ஜீனிரிங்கிற்கு அடுத்த படியாக மாணவர்கள் படிக்க விரும்பும் ‛விஷ்வல் கம்யூனிகேஷன்' என்ற படிப்பை அறிமுகம் செய்தவரும் அதற்கான விதை போட்டவரும் இவர்தான்.


latest tamil news


தனது ஒவியங்களால் மாநில மற்றும் தேசிய அளவில் விருது பெற்றவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைய ஒவிய கண்காட்சி நடத்தியவர்.
மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை வடிவமைத்த சவுத்ரியின் நட்பு கிடைத்த பிறகு இவரது ஆர்வம் சிற்பத்தின் மீது திரும்பியது.
செம்பு,பித்தளை,அலுமினியம் என்று கிடைத்த உலோகங்களைக் கொண்டு சிற்பங்களை படைத்துள்ளார் இதற்கு சர்வதேச பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
கொரோனா காரணமாக ஊரும் மக்களும் முடங்கிப் போன நிலையில் ஒரு ஒவியராக இவரால் அப்படியிருக்க முடியவில்லை தான் பார்த்த தன்னை பாதித்த விஷயங்களை ஒவியமாக தீட்டிவந்தார் கறுப்பு வெள்ளையில் வரைந்ததை ஒவியம் என்றும் வண்ணத்தில் வரைந்ததை பெயிண்டிங் என்றும் பிரித்துக் கொண்டார்.
இந்த நிலையில் 75 வது சுதந்திர தினம் வரவே இந்த தினத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் லலித்கலா அகாடமியில் இவரது ஒவியம் மற்றும் சிற்பக்கண்காட்சி நடந்துவருகிறது.
வருகின்ற ஆகஸ்ட் 31 ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை கலையில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் சென்று பார்க்க வேண்டும்,அதுதான் கலைக்கும் இந்த மூத்த கலைஞருக்கும் செய்யும் மரியாதை.
-எல்.முருகராஜ்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X