பொது செய்தி

தமிழ்நாடு

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
தலைவாசல்: வீரகனூர், சொக்கனூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 21; பெட்ரோல் பங்க் உரிமையாளர். பழநியை சேர்ந்தவர் ரம்யா, 21; பட்டதாரி. இவர், உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது, அங்கு கான்ட்ராக்ட் பணிக்கு சென்ற ராமமூர்த்திக்கும், ரம்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இரு ஆண்டாக காதலித்தனர். வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், கோவிலில் திருமணம் செய்து கொண்டு, நேற்று

தலைவாசல்: வீரகனூர், சொக்கனூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 21; பெட்ரோல் பங்க் உரிமையாளர். பழநியை சேர்ந்தவர் ரம்யா, 21; பட்டதாரி. இவர், உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது, அங்கு கான்ட்ராக்ட் பணிக்கு சென்ற ராமமூர்த்திக்கும், ரம்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இரு ஆண்டாக காதலித்தனர். வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், கோவிலில் திருமணம் செய்து கொண்டு, நேற்று பாதுகாப்பு கேட்டு, வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். போலீசார் பேச்சு நடத்தியதில், பெற்றோர் சமாதானம் அடைய, ரம்யாவை, ராமமூர்த்தியுடன் அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X