பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.சி., - எஸ்.டி., மாணவருக்கு இலவச திறன் மேம்பாடு பயிற்சி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சேலம்: எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு, குறுகிய கால திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாடு கழகம் மூலம், எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு, ஒரு மாதம் முதல், ஆறு மாதம் வரையான குறுகியகால திறன் மேம்பாடு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. அதில் பங்கேற்க,

சேலம்: எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு, குறுகிய கால திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறது.


இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாடு கழகம் மூலம், எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு, ஒரு மாதம் முதல், ஆறு மாதம் வரையான குறுகியகால திறன் மேம்பாடு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. அதில் பங்கேற்க, தீதீதீ.tணூச்டிணடிணஞ்.tச்டஞீஞிணி.ஞிணிட் என்ற இணையதளம் வழியே பதிவு செய்து பயன்பெறலாம். போக்குவரத்து படி வழங்குவதோடு, சான்றிதழ் கொடுத்து, தனியார் நிறுவன வேலைக்கு வழி செய்யப்படும். பயிற்சி முடித்தவர், அதுசார்ந்த தொழில் தொடங்க, 'தாட்கோ' இணையதளத்தில் பதிவு செய்து தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றிலும் பயன்பெறலாம். அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பயனாளிகள் தேர்வு: பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், நேற்று நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் செல்வம் தலைமை வகித்தார். கிராமப்புறத்தில், 18 முதல், 35 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களுக்கு, திறன் மேம்பாடு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரப்படும். அதற்கான, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X