பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி செல்லா குழந்தைகள் ஆக., 31 வரை கணக்கெடுப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சேலம்: பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, ஆக., 31 வரை நடக்கிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளில், 6 வயது முதல், 19 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறனுடைய குழந்தைகளை, வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும் பணி, ஆக., 10

சேலம்: பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, ஆக., 31 வரை நடக்கிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளில், 6 வயது முதல், 19 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறனுடைய குழந்தைகளை, வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும் பணி, ஆக., 10 முதல், 31 வரை நடக்கிறது. இப்பணியை, ஆசிரிய பயிற்றுனர், சிறப்பாசிரியர், இயன்முறை பயிற்சியாளர், பள்ளி ஆசிரியர், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர். கணக்கெடுப்பில் கண்டறியப்படும் குழந்தைகள், அவர்களின் வயதுக்கேற்ப முறையான பள்ளி அல்லது சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட உள்ளனர். கலெக்டர் உத்தரவுப்படி, பள்ளி கல்வித்துறை பணியாளர்களுடன், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை, மாநகராட்சி, போலீஸ், மருத்துவம் உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, பணியை மேற்கொள்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X