சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புது சாலை சேதம்: மக்கள் வாக்குவாதம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லி பேரூராட்சி, எட்டாவது வார்டு குடியிருப்பு பகுதிகளில், 2019 - 20ல், 300க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி குடியிருப்புக்கு, 67 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, இரு நாளாக மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், 28, அவரது வீட்டின் அருகே போடப்பட்ட தார்ச்சாலையை சேதப்படுத்தி, மேற்கொண்டு

கெங்கவல்லி: கெங்கவல்லி பேரூராட்சி, எட்டாவது வார்டு குடியிருப்பு பகுதிகளில், 2019 - 20ல், 300க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி குடியிருப்புக்கு, 67 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, இரு நாளாக மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், 28, அவரது வீட்டின் அருகே போடப்பட்ட தார்ச்சாலையை சேதப்படுத்தி, மேற்கொண்டு சாலை அமைக்கக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பேரூராட்சி செயல் அலுவலர் ராணி தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்பகுதி மக்கள், செயல் அலுவலரை முற்றுகையிட்டு, 'ஆக்கிரமிப்பு அகற்றி, சாலை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் கூறினர். செயல் அலுவலர், ஆவணம் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு கண்டறிந்தால், சாலை சேதப்படுத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், மக்கள் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X