அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 20, 2021
Share
அறிவியல் ஆயிரம்ஞாபக சக்தி மீன்கடல்வாழ் உயிரினமான கணவாய் மீன் (கட்டில் பிஷ்) கடந்த வாரம் என்ன சாப்பிட்டது முதல் அது வயதாகி இறக்கும் வரை அதன் ஞாபக சக்தி குறையாமல் உள்ளது என பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. வயது ஆனாலும் ஞாபகத்திறனை உயிரினம் இழப்பதில்லை என்பதற்கு இது முதல் சான்று என தெரிவித்துள்ளனர். 24 கணவாய் மீன் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. இதில்

அறிவியல் ஆயிரம்

ஞாபக சக்தி மீன்


கடல்வாழ் உயிரினமான கணவாய் மீன் (கட்டில் பிஷ்) கடந்த வாரம் என்ன சாப்பிட்டது முதல் அது வயதாகி இறக்கும் வரை அதன் ஞாபக சக்தி குறையாமல் உள்ளது என பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. வயது ஆனாலும் ஞாபகத்திறனை உயிரினம் இழப்பதில்லை என்பதற்கு இது முதல் சான்று என தெரிவித்துள்ளனர். 24 கணவாய் மீன் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. இதில் பாதி 10 - 12 மாதம், பாதி 22 - 24 மாதம் வயதுடைய உடைய மீன்கள். இதன் ஆயுட்காலம் 1 - 2 ஆண்டுகள். இது 15 - 25 செ.மீ., நீளம், 50 செ.மீ. அகலம், இதன் எடை 10 கிலோ.

தகவல் சுரங்கம்

எல்லை


சர்வதேச அளவில் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை துாரத்தில், நீண்டதுார எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகளாக அமெரிக்கா - கனடா உள்ளது. இரு நாடுகளும் 8890 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து உள்ளன. இதில் இரண்டாவது இடத்தில் 6846 கி.மீ., துார எல்லை பகிர்வுடன் ரஷ்யா - கஜகஸ்தான் உள்ளது. 3வது இடத்தில் அர்ஜென்டினா - சிலி (5308 கி.மீ.), நான்காவது இடத்தில் சீனா - மங்கோலியா (4630 கி.மீ.) உள்ளன. ஐந்தாவது நீளமான எல்லையாக இந்தியா - வங்கதேசம் எல்லை உள்ளது. இதன் துாரம் 4156 கி.மீ. ஆறாவது இடத்தில் சீனா - ரஷ்யா (4133 கி.மீ.) உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X