சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி தற்கொலை முயற்சி; இழப்பீடு வழங்க முறையீடு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சேலம்: இழப்பீடு வழங்க கோரி, தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சேலம், உடையாப்பட்டி, கக்கன் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமச்சந்திரன், 38. இவர், சேலம் அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன், நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர் போலீசாரிடம் கூறியதாவது: மனைவி சீதாவுக்கு சேலம் அரசு

சேலம்: இழப்பீடு வழங்க கோரி, தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சேலம், உடையாப்பட்டி, கக்கன் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமச்சந்திரன், 38. இவர், சேலம் அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன், நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர் போலீசாரிடம் கூறியதாவது: மனைவி சீதாவுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டது. 2015ல், மூன்றாம் முறை கர்ப்பமானார். ஆறாம் மாதத்தில் குழந்தை பிறந்து இறந்து விட்டது. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சரியாக செய்யாததால், இழப்பீடு வழங்க, குடும்ப நலத்துறைக்கு கோரிக்கை விடுத்தேன். 4 ஆண்டு போராட்டத்துக்கு பின், மாவட்ட சுகாதாரத்துறை மூலம், 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இரு ஆண்டாக வழங்கவில்லை. பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் கூறியதால், ராமச்சந்திரன் புறப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X