சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருங்கல் சரிந்து தொழிலாளி பலி; தகவலின்றி அடக்கத்துக்கு முயற்சி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கருமந்துறை: கருங்கல் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை, போலீசாருக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்ய முயன்றனர். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி, நாகலூரை சேர்ந்தவர் பழனி, 32. இவர், விவசாய தோட்டத்தில் கருங்கல் அடுக்கி வைக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டார். அப்பணியில், அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி வையாபுரி, 40, என்பவரும் பணியில் ஈடுபட்டார்.

கருமந்துறை: கருங்கல் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை, போலீசாருக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்ய முயன்றனர். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி, நாகலூரை சேர்ந்தவர் பழனி, 32. இவர், விவசாய தோட்டத்தில் கருங்கல் அடுக்கி வைக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டார். அப்பணியில், அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி வையாபுரி, 40, என்பவரும் பணியில் ஈடுபட்டார். மதியம், 3:30 மணிக்கு, கருங்கல் சரிந்து விழுந்ததில், வையாபுரி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பழனி படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். நேற்று, வையாபுரி உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றனர். இதையறிந்த கரியகோவில் போலீசார் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X