சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மத்திய இணை அமைச்சர் முருகன்: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், 43 பேர் பொறுப்பேற்றனர்; அனைவரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அவரது ஆட்சியில் விவசாயம் காப்பாற்றப்பட்டு உள்ளது; அவர்கள் வருமானமும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.'டவுட்' தனபாலு: மத்தியில் காங்., தலைமையிலான கூட்டணி அரசின்

'டவுட்' தனபாலு


மத்திய இணை அமைச்சர் முருகன்:

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், 43 பேர் பொறுப்பேற்றனர்; அனைவரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அவரது ஆட்சியில் விவசாயம் காப்பாற்றப்பட்டு உள்ளது; அவர்கள் வருமானமும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

'டவுட்' தனபாலு: மத்தியில் காங்., தலைமையிலான கூட்டணி அரசின் ஆட்சியின் போது, தினமும், 10 - 20 விவசாயிகள் தற்கொலை செய்ததாக செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். சமீப காலமாக அத்தகைய செய்திகளை காணவில்லை. இது, பிரதமர் மோடி அரசின் சாதனை என்பதில், 'டவுட்'டே இல்லை!


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசன்:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது, மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டங்களில் ஒன்று; தேர்தல் வாக்குறுதியிலும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது; இப்போது தமிழகத்திலும் நடந்துள்ளது. இந்த மாற்றம் இந்தியா முழுதும் நிகழ வேண்டும்.

'டவுட்' தனபாலு: எல்லா அறிவிப்புகளும், கட்சிகளின் செயல் திட்டங்களும் எங்களுடையது தான் என்கிறீர்கள். தேர்தல் நேரத்தில், பிற கட்சிகளுக்கு மிச்சம் வைக்காமல், பல நாட்களாக எல்லா அறிவிப்புகளையும் வெளியிட்டு விட்டீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. எனினும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது, பிற கட்சிகளுக்கு சிரிப்பை தான் வரவழைக்கும்!


தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ்:
பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 35 ஆயிரம் கோடி ரூபாய். கல்வித் துறைக்கு இரண்டு ஆண்டுகளில் கூடுதல் நிதி ஒதுக்குவதாக, நிதி அமைச்சர் கூறியுள்ளார். எனவே, அரசு பள்ளிகளை, வறுமையின் அடையாளமாக அல்லாமல், பெருமையின் அடையாளமாக உயர்த்திக் காட்டுவோம்.

'டவுட்' தனபாலு: அரசு தொடர்ந்து பல சலுகைகளையும், அறிவிப்புகளையும், இட ஒதுக்கீட்டையும் அரசு பள்ளிக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி வருவதால், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, சமீப காலமாக ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே, அரசு பள்ளிகளை பெருமையின் அடையாளமாக உயர்த்த வேண்டும் என்பதில், யாருக்கும் 'டவுட்'டே வராது!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
21-ஆக-202114:40:00 IST Report Abuse
Raj எல்லா பணத்தையும் அசிரியர்களுக்கு DA வாக கொடுத்துவிடுவீர்களோ? இது போதாதுனு தரம் உயர்த்த பயிற்சி செலவு. இதை எல்லாம் பெற்ற பிறகும், கழிவரைக்கு வாங்கும் மக்கு, முதலியவற்றை வீட்டுக்கு எடுத்து செல்லும் கூட்டம்.
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
21-ஆக-202104:35:16 IST Report Abuse
rajan சமீப காலமாக அத்தகைய செய்திகளை காணவில்லை. இது, பிரதமர் மோடி அரசின் சாதனை என்பதில், 'டவுட்'டே இல்லை -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X