சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'டாஸ்மாக்' ஊழியர்களிடம் நடக்கும் வசூல் வேட்டை!

Added : ஆக 20, 2021
Share
Advertisement
'டாஸ்மாக்' ஊழியர்களிடம் நடக்கும் வசூல் வேட்டை!''காத்து வீசுறப்பவே துாத்திக்கணும்னு நினைக்காவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.''யாருன்னு சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''கோவையை, தி.மு.க.,வுல ஐந்து மாவட்டமா பிரிச்சு பொறுப்பாளர்களை நியமிச்சிருக்காவ... ஆனா, சட்டசபை தேர்தல்ல, கோவையில இருக்கிற 10 தொகுதிகள்ல, ஒரு இடத்துல கூட தி.மு.க.,

டீ கடை பெஞ்ச்


'டாஸ்மாக்' ஊழியர்களிடம் நடக்கும் வசூல் வேட்டை!



''காத்து வீசுறப்பவே துாத்திக்கணும்னு நினைக்காவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.

''யாருன்னு சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கோவையை, தி.மு.க.,வுல ஐந்து மாவட்டமா பிரிச்சு பொறுப்பாளர்களை நியமிச்சிருக்காவ... ஆனா, சட்டசபை தேர்தல்ல, கோவையில இருக்கிற 10 தொகுதிகள்ல, ஒரு இடத்துல கூட தி.மு.க., ஜெயிக்கலை வே...

''இதனால, கோபமான அக்கட்சி தலைமை, மாவட்ட பொறுப்பாளரா இருந்த ஒருத்தரை மட்டும் நீக்கிட்டு... மத்த நான்கு பேர்கிட்டயும் ராஜினாமா கடிதத்தை
வாங்கியிருக்கு வே...

''ஆனா, அவங்களை நீக்கும் உத்தரவு இன்னும் வரலை... 'எப்படியும் கட்சி பதவி போயிடும்... அதுக்குள்ள முடிஞ்சளவு வசூல் பண்ணிரணும்'னு
கிளம்பிட்டாவ வே...

''ஒருத்தர், 'சீல்' வைக்கப்பட்ட செங்கல் சூளைகளை திறக்குறதா சொல்லி, வசூல் பண்ணுதாரு... இன்னொருத்தர், 'டாஸ்மாக்' கடைகள்ல புகுந்து, 50 ஆயிரம் ரூபாய் வரை 'கலெக் ஷன்' போடுதாரு... 'இப்படியே போனா கோவையில தி.மு.க.,வே இருக்காது'ன்னு கட்சிக்காரங்க புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அங்கு வந்த ஒருவரிடம், ''எம்.ஜி.ராமச்சந்திரன் போல அரசியல்ல பெரிய ஆளா வரணும்னு நடிகர் கார்த்திக்கும் நினைச்சார்... ஆனா, நடக்கலையேங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''காரியம் ஆகணும்னா காலை புடிச்சு தான் ஆகணும் பா...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''சென்னை மாதவரத்துல இயங்குற கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை அதிகாரி ஒருத்தர், போன அ.தி.மு.க., ஆட்சியில, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் நெருக்கம் காட்டி, 'பவர்புல்' அதிகாரியா இருந்தாரு பா...

''ஆட்சி மாறியதும், தன் பதவியை தக்க வைக்க, தொகுதி ஆளுங்கட்சி புள்ளியிடம் சரணாகதி அடைஞ்சிட்டாராம்... அதிகாரி கெஞ்சியதைப் பார்த்து, ஆளுங்கட்சி புள்ளியும் மனசு
இரங்கிட்டாரு பா...

''ஆனா, அந்த அதிகாரி இருக்குற வரை பல்கலை முன்னேறாதுன்னு அங்குள்ளவங்க பேசிக்கிறாங்க... 'பத்து சிங்கம்' வந்தாலும், அவரை ஒண்ணும் பண்ண முடியாதாம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''வசூல் வேட்டை தீவிரமா நடக்கறது ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''டாஸ்மாக் மதுரை மண்டலத்துல, 10 மாவட்டங்கள் வரது... இதுல, 1,700க்கும் மேற்பட்ட மதுக் கடைகள் இருக்கு... இந்தக் கடைகள்ல, 3,000க்கும் மேற்பட்டவா பணியில இருக்கா ஓய்...

''தி.மு.க., ஆட்சிக்கு வந்துட்ட சூழல்ல, மண்டல மேலாளரா அருண் சத்யான்னு ஒருத்தரை நியமிச்சிருக்கா... 'அவரை நாங்க தான் இங்க கொண்டு வந்தோம்... நாங்க சொல்றதை தான் அவர் கேட்பார்'னு டாஸ்மாக் ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் தம்பட்டம் அடிச்சுக்கறா ஓய்...

''இதனால, 'லோக்கல் அரசியல் புள்ளிகளுக்கு தரணும்... அதிக வருவாய் கிடைக்கற கடைகளுக்கு இடமாறுதல் வாங்கி தரோம்'னு சொல்லி, ஊழியர்களிடம் வசூல் வேட்டையை ஆரம்பிச்சுட்டா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X