பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஆக., 21, 1907கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில், 1907 ஆக., 21ம் தேதி பிறந்தவர் ப.ஜீவானந்தம். இயற்பெயர் சொரிமுத்து. இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராக திகழ்ந்தார். 10ம் வகுப்பு படிக்கும்போதே, 'சுகுணராஜன் அல்லது சுதந்திரவீரன்' என்ற நாவலை எழுதினார்.காந்திய வழியில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். பின், கம்யூனிசத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.

இதே நாளில் அன்று


ஆக., 21, 1907



கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில், 1907 ஆக., 21ம் தேதி பிறந்தவர் ப.ஜீவானந்தம். இயற்பெயர் சொரிமுத்து. இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராக திகழ்ந்தார். 10ம் வகுப்பு படிக்கும்போதே, 'சுகுணராஜன் அல்லது சுதந்திரவீரன்' என்ற நாவலை எழுதினார்.காந்திய வழியில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். பின், கம்யூனிசத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. பகத் சிங் எழுதிய, 'நான் ஏன் நாத்திகனானேன்?' என்ற நுாலை, தமிழில் மொழிபெயர்த்தார்.பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, தன் வாழ்நாளில் 10 ஆண்டுகளை சிறையிலேயே கழித்தார். 'சமதர்மம், அறிவு, ஜனசக்தி' உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1952ல், சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 'தாமரை' என்ற இலக்கிய இதழை துவக்கினார். 'கலை இலக்கிய பெருமன்றம்' என்ற அமைப்பை உருவாக்கினார். 1963 ஜன., 18ம் தேதி தன் 55-வது வயதில் காலமானார்.
ப.ஜீவானந்தம் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X