பொது செய்தி

இந்தியா

திருவோணத் திருநாளும் வந்தல்லோ - இன்று ஓணம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மகாபலிக்கு வரவேற்புஆவணி மாதம் திருவோண நன்னாளில் கஷ்யப முனிவர், அதிதி தம்பதியரின் மகனாக வாமனர் அவதரித்தார். இந்நிலையில் அசுரர்குல மன்னன் மகாபலி மூவுலகையும் தன் வசமாக்க விஸ்வஜித் என்னும் யாகம் ஒன்றை நடத்தினான். அங்கு சிறுவனாக வந்த வாமனர் மூன்றடி நிலத்தை தானமாக கேட்டார். வாமனரைக் கண்ட மகாபலியின் குருநாதர் சுக்ராச்சாரியார், தானம் கேட்பவர் மகாவிஷ்ணு என்பதை

திருவோணத் திருநாளும்  வந்தல்லோ  - இன்று ஓணம்


மகாபலிக்கு வரவேற்புஆவணி மாதம் திருவோண நன்னாளில் கஷ்யப முனிவர், அதிதி தம்பதியரின் மகனாக வாமனர் அவதரித்தார். இந்நிலையில் அசுரர்குல மன்னன் மகாபலி மூவுலகையும் தன் வசமாக்க விஸ்வஜித் என்னும் யாகம் ஒன்றை நடத்தினான். அங்கு சிறுவனாக வந்த வாமனர் மூன்றடி நிலத்தை தானமாக கேட்டார். வாமனரைக் கண்ட மகாபலியின் குருநாதர் சுக்ராச்சாரியார், தானம் கேட்பவர் மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து தானம் அளிக்காதே என எச்சரித்தும் மகாபலி கேட்கவில்லை. இதை பயன்படுத்திய வாமனர், திரிவிக்ரமனாக உயர்ந்து நின்று உலகையே இரண்டடியால் அளந்தார். மூன்றாம் அடிக்கு இடம் எங்கே எனக் கேட்க மகாபலி சரணடைந்தான். அவனைத் தன் திருவடியால் பாதாள உலகிற்கு அனுப்பி சிரஞ்சீவிகளில் ஒருவராக்கினார். மகாபலி ஓணத்தன்று தன் மலை நாட்டு மக்களை காண வருவதாக ஐதீகம். வாசலில் பூக்கோலம் இட்டு, 'ஓணம் ஓணம் பொன்ஓணம்' என பாடல்கள் பாடி மகாபலியை கேரளமக்கள் வரவேற்கின்றனர்.


பேர் சொல்லும் பிள்ளைபெற்றோரின் பேச்சைக் கேட்காமல் சில குழந்தைகள் அடம் பிடிப்பர். படிக்கவோ, ஹோம் ஒர்க் செய்யவோ மறுப்பதுண்டு. இவர்கள் திருந்துவதற்காக சொல்ல வேண்டிய மந்திரம் ஒன்று இருக்கிறது. வாமன மூர்த்தியின் தாய் அதிதியால் சொல்லப்பட்ட இது பாகவதத்தில் உள்ளது.
“யக்ஞேச யக்ஞ புருஷாச்யுத தீர்த்தபாததீர்த்த ச்ரவ: சரணவ மங்கள நாமதேயா” யாகம் மூலம் வழிபடப்படுபவரே! யாகங்களின் தலைவரே! புனிதமான தீர்த்தங்களை திருவடியில் உள்ளவரே! கல்யாண குணங்கள் கொண்டவரே எம்மைக் காத்தருள்வாயாக தினமும் மாலையில் விளக்கேற்றி இதை பக்தியுடன் 12 முறை சொன்னால் குழந்தைகள் புத்திசாலிகளாக திகழ்வதோடு பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர்.


யாசித்தாலும் உத்தமனே!மண்ணில் நான்கு விதமானவர்கள் இருக்கிறார்கள். பிறரையும் துன்புறுத்தி தானும் துன்பப்பட்டு கிடப்பவன் அதமா அதமன். பிறரைக் கெடுத்து தான் மட்டும் வாழ்பவன் அதமன். பிறரையும் வாழ வைத்து தானும் வாழ்பவன் மத்திமன். தன்னைக் கெடுத்து பிறரை வாழ வைப்பவன் உத்தமன்.இந்த நான்கில் 'உத்தமன்' என்னும் பிரிவைச் சேர்ந்தவர் வாமனர். ஆனால் மகாபலியிடம் மூன்றடி யாசகம் கேட்டது இழிவான செயல் என்றாலும், தனக்காக இல்லாமல் உலக நன்மைக்காக யாசகம் கேட்டார். உலகிற்கே படியளக்கும் மகாலட்சுமியை மார்பில் தாங்கி நிற்பதால் யாரிடமும் அவர் யாசிக்கத் தேவையில்லை என்றாலும் கைநீட்டி யாசகம் கேட்டார்.


மனைவியை மறைத்த பிரம்மச்சாரிவிஷ்ணுவை விட்டு கணப்பொழுதும் பிரியாதவள் மகாலட்சுமி. வாமன அவதாரத்தில் விஷ்ணு பிரம்மச்சாரியாக இருந்த போதிலும், அவரை விட்டு விலக அவளுக்கு மனம் வரவில்லை. ஸ்ரீவத்சம் எனப்படும் அவரது திருமார்பில் எப்போதும் மகாலட்சுமி வீற்றிருப்பாள். லட்சுமி மார்பில் இருக்க, மகாபலியிடம் யாசகம் கேட்க எப்படி செல்வது என்று தயக்கம் வாமனருக்கு உண்டானது. கிருஷ்ணார்ஜுனம் என்னும் கருப்பு நிறப் போர்வையை போர்த்தி மார்பை மறைத்துக் கொண்டார். இதன்பின் லட்சுமியின் பார்வை மகாபலிக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போனது. இதன் பின்னரே வாமனர் நர்மதை நதிக்கரையில் மகாபலி நடத்திய யாகத்திற்கு புறப்பட்டார்.

மழை தரும் 'தீர்த்த பாதா'வாமன மூர்த்தியின் வரலாற்றைப் படித்தால் மழை பெய்யும். ஏனெனில் வாமனருக்கு 'தீர்த்த பாதா' என்னும் சிறப்புப் பெயருண்டு. புனிதமான தீர்த்தத்தை பாதத்தில் உடையவர் என்பது இதன் பொருள். வாமனர் திரிவிக்ரம அவதாரம் எடுத்து பாதத்தை விண்ணுலகம் வரை துாக்கிய போது, அது சத்தியலோகத்தை அடைந்தது. அதை தரிசித்த பிரம்மா புனித நீரால் அபிஷேகம் செய்து ஆராதித்தார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X