நாடு தழுவிய போராட்டம் :19 எதிர்கட்சிகள் முடிவு

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி,: சமையல் காஸ், சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.20 முதல் செப்.30 வரை, நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த, எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், 19 எதிர்க்கட்சிகள் இன்று (ஆக.20), 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக ஆலோசனை நடத்தின. கூட்டத்துக்கு பின், எதிர்க்கட்சிகள் கூட்டாக
செப்.,20 முதல், செப்.,30 வரை , போராட்டம்,  எதிர்கட்சிகள், முடிவு

புதுடில்லி,: சமையல் காஸ், சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.20 முதல் செப்.30 வரை, நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த, எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், 19 எதிர்க்கட்சிகள் இன்று (ஆக.20), 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக ஆலோசனை நடத்தின. கூட்டத்துக்கு பின், எதிர்க்கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜம்மு - காஷ்மீரில், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்; அங்கு வெளிப்படைத்தன்மையுடன் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும்.
சமையல் காஸ், சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி திட்டத்தை, நாடு முழுவதும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.


latest tamil news




மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்து, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம், 20 - 30ம் தேதி வரை, நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டங்கள், அந்தந்த மாநிலங்களில் கட்சிகளின் நிர்வாகிகள் முடிவு செய்வர்.
பிரதமரின் சுதந்திர தின உரையில், மக்கள் பிரச்னை எதுவும் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'உத்தர பிரதேசத்தில், ஒரு கிராமப் பகுதியில் இருப்பதால், கூட்டத்தில் பங்கு பெற முடியவில்லை' என, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ், சோனியாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஆக-202119:35:59 IST Report Abuse
Vittal anand rao. இவர்கள் ஒருவரை ஒருவர் கவிழ்க்க பார்க்கும் கும்பல். அன்டோநியோ மைனோக்கு இங்கென்ன வேலை.? இத்தாலியில் மேஜை துடைக்க போகலாம்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
21-ஆக-202110:31:13 IST Report Abuse
vbs manian இந்த மண்ணுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவர் முன் இந்த மண்ணில் பிறந்தவர்கள் கூடி உள்ள அரசை கவிழ்க்க திட்டம் போடுகிறார்கள். சுதந்திரத்து க்கு பாடுபட்டு உயிர் நீத்த ஆத்மாக்கள் கண்ணீர் சிந்துவார்கள்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-ஆக-202110:09:41 IST Report Abuse
M  Ramachandran தற்போனது தேர்தல் காலமில்லை. என்ன செய்வது என்று முடிவெடுத்துள்ளார். வேலை ( வேலைய இல்லாதிண்டாட்டம் படி காசு மற்றதும் பிரியாணி கிடைக்காது) இல்லாதவர்கள் கூடி தொண்டர்களுக்கு யிருப்புவுள்ளதாய் காட்டி கொண்டிடுக்க வேண்டும். இல்லையென்றால் தொண்டர்கள் காணாமல் போய் விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X