கலப்பட டீ தூள் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலப்பட டீ தூள் பறிமுதல்

Added : ஆக 20, 2021
Share
பாலக்கோடு: காரிமங்கலம் யூனியனில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு நகர பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஒரு நபர், எம்.ஜி.,ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சாக்கு பையில் வைத்து கடைகளுக்கு டீ தூளை விற்றார். அவரிடம், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், டீ தூள் பொட்டலங்களை வாங்கி சோதனை செய்ததில், அது கலப்பட டீ தூள் என தெரிந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த, 30

பாலக்கோடு: காரிமங்கலம் யூனியனில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு நகர பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஒரு நபர், எம்.ஜி.,ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சாக்கு பையில் வைத்து கடைகளுக்கு டீ தூளை விற்றார். அவரிடம், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், டீ தூள் பொட்டலங்களை வாங்கி சோதனை செய்ததில், அது கலப்பட டீ தூள் என தெரிந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த, 30 கிலோ டீ தூள் மற்றும் 7,500 டீ தூள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார். அவற்றின் மாதிரியை ஆய்வு கூடத்திற்கு அனுப்ப உத்தரவிட்டார். ஆய்வு அறிக்கை அடிப்படையில், டீ தூள் விற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X