பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம், பிற மாநிலங்களிலுள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.ம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மத்திய பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தை சேர்ந்த, பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவியர், 2021-2022 கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம், பிற மாநிலங்களிலுள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.ம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மத்திய பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தை சேர்ந்த, பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவியர், 2021-2022 கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகையாக, ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு, இரண்டு லட்சம் வழங்க, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை பெற விரும்பும் தகுதியான மாணவ, மாணவியர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை நேரில் அணுகி, விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் அளிக்க வேண்டும். மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பங்களை பரிந்துரை செய்து, இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலக இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை, 5, என்ற முகவரிக்கு வரும், நவ., 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X