பொது செய்தி

தமிழ்நாடு

மண்புழு உர உற்பத்தி பயிற்சி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: பர்கூர், வட்டார வேளாண் துறை, அட்மா திட்டத்தின் மூலம், மண்புழு உர உற்பத்தி குறித்த ஒருநாள் பயிற்சி தொகரப்பள்ளி கிராமத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன், வேளாண் துறையின் திட்ட செயலாக்கம் குறித்து விளக்கினார். பர்கூர் வேளாண் உதவி இயக்குனர் சகாயராணி, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் ஆகியவற்றை

கிருஷ்ணகிரி: பர்கூர், வட்டார வேளாண் துறை, அட்மா திட்டத்தின் மூலம், மண்புழு உர உற்பத்தி குறித்த ஒருநாள் பயிற்சி தொகரப்பள்ளி கிராமத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன், வேளாண் துறையின் திட்ட செயலாக்கம் குறித்து விளக்கினார். பர்கூர் வேளாண் உதவி இயக்குனர் சகாயராணி, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் ஆகியவற்றை பயன்படுத்தும் முறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார். வேளாண் அறிவியல் மைய திட்ட ஆலோசகர் குணசேகர், மண்புழு உர உற்பத்தி அதன் பயன்கள் மற்றும் அதன் கட்டமைப்பு, பராமரிப்பு குறித்த விளக்கங்களை அளித்தார். உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் பன்னீர்செல்வம், அங்கக வேளாண்மை குறித்தும், அதன் சான்றுத்தன்மை குறித்தும் விளக்கினார். வட்டார வேளாண் அலுவலர் சக்திவேல், பண்ணைக் கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் வல்லரசு, வீரமணி, தனசேகர், திருமால் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X