காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டுகோள்| Dinamalar

காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டுகோள்

Added : ஆக 20, 2021
Share
அரூர்: அரூர் அருகே, காட்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என, மலைவாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்.,ல், 62 கிராமங்கள் உள்ளன. இதில், கலசப்பாடி, அரசநத்தம், ஆலமரத்துவளவு, கருக்கம்பட்டி உள்ளிட்ட, 11 கிராமங்களில், 2,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களுக்கு வாச்சாத்தியில் இருந்து

அரூர்: அரூர் அருகே, காட்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என, மலைவாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இது குறித்து, அவர்கள் கூறியதாவது: அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்.,ல், 62 கிராமங்கள் உள்ளன. இதில், கலசப்பாடி, அரசநத்தம், ஆலமரத்துவளவு, கருக்கம்பட்டி உள்ளிட்ட, 11 கிராமங்களில், 2,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களுக்கு வாச்சாத்தியில் இருந்து செல்லும், 7 கி.மீ., மண் சாலை கரடுமுரடாகவும், மேடு பள்ளமாகவும் உள்ளது. இந்த வழித்தடத்திலுள்ள காட்டாற்றில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் ஆற்றை கடக்க முடியாமல் அவதிப்படுவதுடன், விவசாய விளை பொருட்களை எடுத்துச்செல்ல முடியாத நிலையுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் உடல் நலம் பாதித்த குழந்தைகளை, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே, காட்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X