பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் வாகனங்களை நிறுத்த எதிர்ப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சென்னை சாலையில், தமிழ்நாடு ஓட்டல் அருகில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. இவர்கள், ரேஷன் அரிசி கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து, அதை அலுவலகம் அருகிலுள்ள காலியிடங்களில் நிறுத்தி வருகின்றனர். இவ்வாறு, 500க்கும் மேற்பட்ட பறிமுதல் வாகனங்களை அலுவலகத்தை சுற்றிலும் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சென்னை சாலையில், தமிழ்நாடு ஓட்டல் அருகில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. இவர்கள், ரேஷன் அரிசி கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து, அதை அலுவலகம் அருகிலுள்ள காலியிடங்களில் நிறுத்தி வருகின்றனர். இவ்வாறு, 500க்கும் மேற்பட்ட பறிமுதல் வாகனங்களை அலுவலகத்தை சுற்றிலும் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைத்துள்ளதால், வாகனங்கள் சேதம் அடைவதோடு, விஷ ஜந்துகளின் இருப்பிடமாகவும் மாறி உள்ளது. இது குறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த வாகனங்களை அங்கிருந்து அகற்றி, அதே சாலையிலுள்ள ராணுவ மருத்துவமனை மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி அருகில் கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தி வருகின்றனர். இதற்கு, அப்பகுதி மக்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னும் ஒரு மாதத்தில் அங்கிருந்து வாகனங்களை அப்புறப்படுத்தி விடுவதாக, அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததால், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X